தமிழ் சினிமாவில் டீ-ஏஜிங் தொழில்நுட்பம்... டீ- ஏஜிங் என்றால் என்ன? எவ்வாறு கையாளப்படுகிறது?

தமிழ் சினிமாவில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பற்றி தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இந்த டீ-ஏஜிங் தொழில்நுட்பம் என்றால் என்ன?. இது எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
de aging
de agingpt web
Published on

காலத்திற்கு ஏற்ப சினிமாவில் பல்வேறு புதுப்புது தொழிநுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். அந்த வகையில் தற்போது டீ-ஏஜிங் தொழில்நுட்பம்தான் தமிழ் சினிமாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1920-ஆம் ஆண்டிற்கு முன்பு வந்த திரைப்படங்களில், ஒரு நபரை வயதானவராகவோ அல்லது இளமையாகவோ காண்பிக்க ஒப்பனை எனப்படும் மேக்-அப் பயன்பட்டது. இதையடுத்து 1925-ஆம் ஆண்டு KARL STRUSS என்ற ஒளிப்பதிவாளர், KARL STRUSS தொழில்நுட்பத்தை உருவாக்கி A TALE OF CHRIST என்ற திரைப்படத்தில் பயன்படுத்தினார்.

இந்த தொழில்நுட்பத்தில் ஒரு படத்தில் நடிக்கும் நடிகருக்கு சிவப்பு நிற பெயிண்டை பூசிவிட்டு, கேமராவில் சிவப்பு நிற லென்ஸ் உபயோகப்படுத்தி, அவரை இளமையாகக் காட்டினர். 1970ஆம் ஆண்டிற்கு பிறகு PROSTHETIC MAKEUP பயன்படுத்தி டீ - ஏஜிங் செய்தனர்.

2006-ஆம் ஆண்டு வெளியான X MEN திரைப்படத்தில்தான் சிஜிஐ பயன்படுத்தி டீ-ஏஜிங் செய்தனர். எந்த நடிகருக்கு டீ- ஏஜிங் செய்ய வேண்டுமோ, அவர்களின் முகத்தை நிறைய கேமராக்களை வைத்து ஸ்கேன் செய்து, பின்னர் 3டி மூலம் டீ- ஏஜிங் செய்தனர்.

மேலும் முகத்தில் நிறைய TRACK MARKER பயன்படுத்தி, அவர்களின் முக வெளிபாட்டை ஸ்கேன் செய்து திரைப்படத்தில் இளமையாக காட்டினர். இதையடுத்து அவென்ஞர்ஸ், ஜெமினி மேன், தி ஐரிஸ் மேன் போன்ற திரைப்படங்களில் பயன்படுத்திய பிறகு, டீ ஏஜிங் மிகவும் புகழ் பெற்றது.

de aging
‘WE WANT RUTHU BACK’ ரசிகர்களிடையே அடங்காத ஆதங்கம்... ஆதரவாக களமிறங்கும் ஸ்ரீகாந்த்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிஜிஐ டீ-ஏஜிங் மற்றும் 2Dயை முழுமையாகப் பயன்படுத்திய முதல் படம், சூர்யாவின் 'மாற்றான்' திரைப்படம் தான். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படத்தில் கமல்ஹாசனின் இளமை தோற்றத்திற்காக டீ - ஏஜிங் செய்ய படக்குழு தயாராகினர். ஆனால் பட்ஜெட் பிரச்னையால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது கைவிடப்பட்டது.

G.O.A.T திரைப்படம்
G.O.A.T திரைப்படம்PT

இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'தி கோட்' படத்தில், இந்த சிஜிஐ டீ-ஏஜிங் தொழில்நுட்பம் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் வெற்றி மாறனின் 'விடுதலை - 2', ரஜினியின் 'கூலி' போன்ற திரைப்படங்களிலும் ஃபாளாஷ் பேக் காட்சிகளுக்காக டீ- ஏஜிங் செய்யப்பட உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை தமிழ் சினிமா எவ்வாறு கையாளப்போகிறது, எப்படி அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

de aging
இன்று நிலவு தினம்: சந்திரனை பற்றிய ஐந்து முக்கிய தகவல்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com