”CHENNAI BUS” சென்னை பஸ் பயனர்களே... இந்த APP உங்கள் மொபைல்ல இருக்கா..?

மாநகர போக்குவரத்து கழகம் மூலம் தமிழ்நாடு அரசின் புதிய முயற்சியாக உருவாக்கப்பட்ட “சென்னை பஸ்” என்ற செயலியின் மூலமாக இருக்கின்ற இடத்திலிருந்தே பேருந்தின் இருப்பிடம்,நிறுத்தும் இடம் மற்றும் பயண நேரம் ஆகியவற்றை உடனடியாக அறிந்து கொள்ளலாம்
CHENNAI BUS
CHENNAI BUSTwitter
Published on

ரயில் நிலையம், விமான நிலையம் , பேருந்து நிலையம் மூலமாக புதிதாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு வரும் மக்கள் எவ்வாறு பேருந்தின் மூலம் தங்களது இருப்பிடத்திற்கு செல்வது என்று தெரியாமல் தவறான பேருந்து நிறுத்தத்தில் ஏறிவிடுகின்றனர். தமிழ்நாடு அரசின் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் உருவாக்கப்பட்ட ”சென்னை பஸ்” செயலியானது, தாங்கள் சேரும் இடம் அறியாமல் சிரமப்படும் மக்களுக்கு உதவும் வகையில் பேருந்தின் நிகழ்நேர இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Minister S. S. Sivasankar
Minister S. S. Sivasankar Twitter

இந்த செயலி மே 4 2022 அன்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநகர பேருந்துகளின் தற்போதைய இருப்பிடத்தையும், அடுத்த பேருந்த நிலையத்தையும் ,அது எத்தனை மணி நேரத்தில் வந்து சேரும் , மேலும் அது சென்று சேரும் இருப்பிடத்தையும் இதில் தேடுவதன் மூலம் யாருடைய உதவியும் இல்லாமல் எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் சேரும் இடத்தினை அடைய முடிகின்றது.இந்த செயலியானது 3233 பெருநகரப் போக்குவரத்துக் கழக(MTC)பேருந்துகளின் இயக்கத்தை கண்கானிக்க உதவும் . இந்த செயலியின் மூலம் , பயணிகள் ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள அனைத்து எம்டிசி பேருந்துகளின் நேரலை இருப்பிடத்தையும் ,பேருந்து வருகை நேரம் மற்றும் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றையும் அறிந்துகொள்ளலாம். இந்த செயலியானது மக்கள் எல்லா இடங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லாமல் செல்வதற்கு உதவும்.

Chennai bus
Chennai busTwitter

இதில் ”பஸ் ரூட்” விருப்பத்தை தேர்வு செய்து, அதில் பேருந்து எண்ணை உள்ளிடும்போது இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காட்டப்படும் . பயனர் அந்த பாதை விருப்பத்தையும் தேர்வு செய்து அவை வந்து சேரும் நேரத்தையும் அறிந்துகொள்ளலாம். அது மட்டும் அல்லாது அவசர நிலை ஏற்பட்டால் பயணிகள் தங்களுக்கு தெரிந்தவர்களின் தொலைப்பேசி எண்ணிற்கோ அல்லது காவல் துறை அதிகாரிகளுக்கோ பேரிடர் சமிக்ஞைகளை அனுப்பலாம். இச்செயலியின் வலது மூலையில் வைக்கப்பட்டுள்ள SOS பட்டன் மூலமாக அவசர கால சமிக்ஞைகளை உடனடியாகவும் காவல்துறைக்கும் அனுப்பலாம் .

Chennai Bus
Chennai BusTwitter

மேலும் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பேருந்துகளின் நிகழ் நேர இருப்பிடத்தையும் அறிந்து கொள்ளலாம். இந்த செயலியில் இருக்கும் ”டிரிப் பிளானர்” அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் பேருந்தின் வழித்தடத்தை அறிந்துகொள்வதன் மூலம் தங்களது இலக்கை தேர்வு செய்யலாம்.பிறகு “எங்களை தொடர்புகொள்ளவும்” என்பதன் மூலமாக தங்களது புகார்களையும் தெரிவித்துக்கொள்ளலாம். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் செயல்படும். ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமே தற்போது உபயோகப்படுத்த முடியும். விரைவில் சென்னைக்கு அடுத்தபடியாக இச்சேவையை பல இடங்களில் விரிவுபடுத்த உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கபடுத்தபட்டுள்ளது.

- Jenetta Roseline S

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com