நாளை விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 : வேகமெடுக்கும் கவுண்டவுன்

நாளை விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 : வேகமெடுக்கும் கவுண்டவுன்
நாளை விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 : வேகமெடுக்கும் கவுண்டவுன்
Published on

சந்திரயான் - 2 விண்கலம் நாளை தனது பயணத்தை தொடங்க உள்ள நிலையில் அதற்கான 20 மணி நேர கவுண்டவுன் இன்று மாலை 6.43க்கு தொடங்கியது. 

கடந்த 15ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்த சந்திரயான்-2 விண்கலம் இறுதி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து விண்கலத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள் வேகமாக சீரமைக்கப்பட்டு, விண்ணில் ஏவப்படும் தேதி 22ஆம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டது. அதன்படி நாளை சந்திராயன் - 2 விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான கவுண்டவுன் இன்று மாலை தொடங்கியது.

சந்திராயன் - 2 தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், கடந்த 15 ஆம் தேதி கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அனைத்துமே சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், சந்திரயான் 2 வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கினால் விஞ்ஞானரீதியாக நிறைய அனுகூலம் கிடைப்பது சாத்தியம் என்றும் தெரிவித்தார். மேலும் சந்திரயான் 2 விண்கலத்தில் இனி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் கூறினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com