சந்திரயான் 3 விண்கலம் வரும் ஆகஸ்ட் மாதம் ஏவப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், சந்திரயான் 3-ன் சோதனைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு விட்டதாகவும், இதனை ஏவும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான்-2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்ட நிலையில், அவை நிலவில் தரை இறங்குவதற்கு மிக அருகில் இருந்தபொழுது அதனுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து சந்திரயான் 3 திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.