புவிச்சுற்றுவட்டப் பாதையில் முதல் சுற்றை நிறைவு செய்த சந்திரயான் 3! இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்தி!

புவிசுற்றுவட்டப் பாதையில் முதல் சுற்றை சந்திரயான் 3 நிறைவு செய்துள்ளதாகவும், விண்கலத்தின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து LVM3-M4 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3 விண்கலம். இந்நிலையில் விண்கலம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அதன் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விரிவாக, இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Chandrayaan-3
ராக்கெட்டில் இருந்து பிரிந்த சந்திரயான் 3 விண்கலம்: பிரத்யேக காட்சிகளை வெளியிட்ட ISRO
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com