நிலவின் நிலப்பரப்பில் முப்பரிமாண புகைப்படத்தை எடுத்த ஆர்பிட்டர்

நிலவின் நிலப்பரப்பில் முப்பரிமாண புகைப்படத்தை எடுத்த ஆர்பிட்டர்
நிலவின் நிலப்பரப்பில் முப்பரிமாண புகைப்படத்தை எடுத்த ஆர்பிட்டர்
Published on

சந்திரயான் 2 விண்கலம் நிலவின் நிலப்பரப்பில் எடுத்த முப்பரிமாண புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்‌ 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்து செயல்படாம‌ல் போனாலும் அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து ஆய்வை மேற்கொண்டுவருகிறது. இந்த ஆர்பிட்டரில் டி.எம்.சி 2 என்ற டெரைன் கேமரா, எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், சூரியசக்தி எக்ஸ்ரே மானிட்டர், இரட்டை அதிர்வலை ரேடார் உள்ளிட்ட 8 கருவிகள் இடம்பெற்றுள்ளன.

 இந்த கருவிகள் நிலவு குறித்த பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகின்றன. இதில் டி.எம்.சி 2 எ‌ன்ற டெரைன் கேமரா நிலவின் நிலப்பரப்பு முழுவதையும்‌ தெளிவாக படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தில் நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் மற்றும் முகடுகள் தெளிவாக பதிவாகியுள்ளன. ஏற்கனவே சந்திரயான் 2 விண்கலத்திலுள்ள சேஸ் 2 என்ற கருவி நிலவில் ஆர்கான் 40 வாயுவை கண்டுபிடித்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com