பொதுமக்களுக்கு வரும் மோசடி அழைப்புகளை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக, மத்திய தொலைத்தொடர்புத்துறை கூறியுள்ளது.
பொதுமக்களுக்கு மோசடியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
வெளிநாடுகளிலிருந்து செயல்படும் இணைய மோசடி கும்பல்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. வெளிநாடுகளில் இருந்தாலும், போலியான இந்திய எண்களிலிருந்து அழைத்து இந்த மோசடிகளை அரங்கேற்றுகின்றன.
இதனை தடுக்க, தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு இணைந்து புதிய தொழில்நுட்பத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக, தொலைத்தொடர்புத்துறை கூறியுள்ளது.
இந்த தொழில்நுட்பம், மோசடியான சர்வதேச தொலைபேசி அழைப்புகளை கண்டறிந்து, அதனை தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த தொழில்நுட்பம், மூன்றில் ஒரு பங்கு மோசடி அழைப்புகளை தடுத்துள்ளதாகவும், அதன் அடுத்தக்கட்டம் மோசடி அழைப்புகளை முற்றிலுமாக தடுக்கும் எனவும், தொலைத்தொடர்புத்துறை கூறியுள்ளது.