நிலவில் குகையா? வருங்காலத்தில் ஆராய்ச்சியாளர்களின் பணியிடமாகப் போகிறதா? வெளியான ஆச்சர்ய தகவல்கள்!

தினம் தினம் நிலவினைப்பற்றி அதிசயிக்கக்கூடிய வகையில் பல தகல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் நிலவில் குகை இருப்பதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது!
சந்திரகுகை
சந்திரகுகைகூகுள்
Published on

1969ல் அப்பலோ11 விண்கலம் மூலம் நிலவில் முதன்முதலில் காலடி பதித்தது நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் என்பது அனைவரும் அறிந்தது. அதன்பிறகு பல ஆய்வாளர்கள் நிலவு குறித்து பல்வேறு ஆராய்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இஸ்ரோ சமீபத்தில் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை நிலவின் தென் துருவ பகுதியில் இறக்கி 14 நாட்கள் ஆராய்ச்சி செய்தது. ஆராய்ச்சியின் முடிவில் பல அரிய தகவல்களை உலகத்திற்கு எடுத்துக் கூறியது.

குறிப்பாக நிலவில் தண்ணீரின் மூலக்கூறுகளான ஆக்ஸிஜன் ஹைட்ரஜன் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதனால் எதிர்காலத்தில் நிலவில் ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைத்து, அங்கு பல்வேறு ஆராய்சிகளை மேற்கொள்ள முடியும் என்று நம்பும் விஞ்ஞானிகள் தற்பொழுது புதியதாக ஒரு செய்தியை பகிர்ந்துள்ளனர்.

அதன்படி ஆம்ஸ்ட்ராங் ஆல்ட்ரின் நிலவில் தரையிரங்கிய பகுதியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குகை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த குகையானது எரிமலை வெடித்து அதனால் ஏற்பட்ட குழம்பால் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கு இதே போல் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட சந்திர குகைகள் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

சந்திரயான் 3
சந்திரயான் 3

இதில் கண்டுபிடிக்கப்பட்ட குகையானது சுமார் 40 மீட்டர் அகலமும் பலமீட்டர் நீளமும் கொண்டிருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த பல சந்திர குகைகள் மர்மமானதாக இருப்பினும் சில குகைகளில் தண்ணீரானது உறைநிலையில் இருக்கலாம் என்றும், வரும்காலத்தில் நிலவில் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தங்கிக்கொள்ள ஏதுவாக சில குகைகள் இருக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வீரர்கள் இந்த குகைகளில் தங்குவதால் சூரியனிலிருந்து நேரடியாக வெளிவரும் காஸ்மிக் கதிர்கள் மற்றும் சூரிய கதிர்வீச்சு, மைக்ரோமீட்டர் தாக்குதல் இவற்றிலிருந்து வீரர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் முடியும் என்றும் கூறுகின்றனர்.

சந்திரகுகை
அறிவோம் அறிவியல் 7 | செவ்வாய் கிரகத்துடன் மோதி மோதிரம் ஆகப்போகுகிறதா அதன் சந்திரன்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com