ரூ.10,800 மட்டுமே.. மோதிர வடிவில் வாட்சை அறிமுகப்படுத்திய கேசியோ.. சிறப்புகள் என்னென்ன?

ரூ.10.800 மதிப்பில் மோதிர வடிவில் கேசியோ நிறுவனம் வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கேசியோ வாட்ச்
கேசியோ வாட்ச்இன்ஸ்டா
Published on

கடிகார உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று, கேசியோ. இது, தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், கேசியோ CRW-001-1JR-ஐ என்ற புதியதொரு கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன், சிறப்பம்சம் என்னவென்றால், இந்த வாட்ச், விரலில் அணியக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, மோதிரத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கம்போலவே நேரம் மற்றும் தேதியைக் கண்காணிக்கிறது அலாரம் மற்றும் ஸ்டாப்வாட்ச் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த கடிகாரம், நீடித்த துருப்பிடிக்காத எஃக் மூலம் தயாரிக்கப்பட்டிருப்பதுடன், வெறும் 16 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது. நீர்ப்புகாத வகையிலும், இரவில் ஒளிரும் விளக்குடன் கூடிய வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 ஆண்டுகள் தாங்கக்கூடிய வகையில் நீடிக்கும் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது, தற்போது ஜப்பானில் மட்டுமே பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. அங்கு இதன் விலை 19.800 யென் (இந்திய மதிப்பில் ரூ.10.800) எனவும் டாலர் மதிப்பில் 129 எனவும் கூறப்படுகிறது. அடுத்த மாதம் முதல் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா| தவறான கருத்துக்கணிப்பா? ஹரியானாவைப்போல் மாற வாய்ப்பு? ஆய்வில் வெளியான புதிய தகவல்!

கேசியோ வாட்ச்
என்னது வாட்ச், மோதிரத்தை வச்சு நம்ம ஹெல்த் எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கலாமா! வாவ்வ்வ் டெக்னாலஜி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com