வாட்ஸ்ஆப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்காவிட்டால் , அதனைப் பயனாளிகள் முழுமையாக பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப்பில் பிரைவசி பாலிஸி எனப்படும் புதிய தனியுரிமைக்கொள்கை தொடர்பான நினைவூட்டல், பயனாளிகளுக்கு, அவ்வப்போது அனுப்பப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்குப் பின்னர், செயலியில் அந்த நினைவூட்டல் நிரந்தரமாகத் தென்படும் என்றும், பின்னர் புதிய கொள்கையை ஏற்கும் வரை பயனாளிகளுக்கு சேவைகள் குறைக்கப்படும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புதிதாக வீடியோ, ஆடியோ கால்களை செய்யும் வசதி நிறுத்தப்படும். ஆனால் வெளியில் இருந்து வரும் அழைப்புகள், காணொலி அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும். ஏதேனும் அறிவிப்புகள் வந்தால், திறந்து படிக்க முடியும். வெளியில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கத் தவறிவிட்டால் திரும்ப அழைக்க முடியும்.
இவ்வாறு சேவைகள் குறைக்கப்பட்ட சில வாரங்கள் கழித்தும் புதிய கொள்கையை பயனாளிகள் ஏற்காவிட்டால் வெளியில் இருந்து வரும் அழைப்புகளும் நிறுத்தப்படும். எனினும் புதிய கொள்கையை ஏற்காத பயனாளிகளின் கணக்குகள் நீக்கப்படாது என, வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.