அறிவோம் அறிவியல் 5 | புதன் கிரகத்தில் குடியேறலாமா?

பூமியை விட அளவில் சிறியதான கிரகங்களும் உள்ளன. அதில் ஒன்றுதான் புதன் கிரகம். இது சூரியனுக்கு மிக அருகில் இருப்பது. அதாவது சூரியனிலிருந்து கிட்டத்தட்ட 6,97,00,000 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த புதனை பற்றிய சில தகவல்களை, இந்த அத்தியாத்தில் பார்க்கலாம்..
புதன் கிரகம்
புதன் கிரகம்ட்விட்டர்
Published on

புதன் கிரகம்

நம்மில் பலரும் ‘நானும் எனது குடும்பமுமே எனக்கு உலகம்’ என்று பல நேரம் சொல்வோம். அதுபோன்ற நேரத்தில், “இல்லை இல்லை, உலகம் ரொம்ப பெரியது” என்று நமக்கு சிலர் அறிவுரை கூறுவார்கள். உண்மையில், இந்த உலகத்தை விட மிகவும் பெரிய, பெரிய கிரகங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன.

அப்படி நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் சில கிரகங்களான வியாழன், சனி, யுரேனஸ் போன்றவை பூமியை விட அளவில் பெரியதாக உள்ளன. தொலைநோக்கிகள் உதவியால் விஞ்ஞானிகள் இதை உறுதிபடுத்தியுள்ளனர். அதே சமயம், பூமியை விட அளவில் சிறியதான கிரகங்களும் உள்ளன. அதில் ஒன்றுதான் புதன் கிரகம். இது சூரியனுக்கு மிக அருகில் இருப்பது. அதாவது சூரியனிலிருந்து கிட்டத்தட்ட 6,97,00,000 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த புதனை பற்றிய சில தகவல்களை, இந்த அத்தியாத்தில் பார்க்கலாம்....

இதையும் படிக்கலாம் : அறிவோம் அறிவியல் 4 | நட்சத்திரங்கள் மின்னுவது எப்படி தெரியுமா? வளிமண்டலத்தின் சிறப்புகள் என்னென்ன?

மனிதர்கள் வாழத்தகுதியான கிரகத்துக்கு தேவையான விஷயம் என்ன?

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஒரு கிரகத்தில் போதுமான அளவு காற்று, வெப்பம் குளிர், தண்ணீர் இருந்தால் அங்கு உயிரினம் இருக்கும் என்று. அது தவறு. நாம் வாழ வேண்டும் என்றால், அந்த கிரகம் அச்சு அசல், பூமியைப்போன்றே தட்ப வெப்பநிலையை கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியம்.

உதாரணத்துக்கு பூமியில் 2 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரித்தாலே, தண்ணீர் தட்டுப்பாடு, அதிக வெப்பம், வெப்பமான காற்று ஆகியவைகளால் நாம் தடுமாறுகிறோம். அப்படியிருக்கையில், அதிக வெப்பமான கிரகத்திலோ அல்லது அதிக குளிரான கிரகத்திலோ, காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தாலோ நாம் எப்படி அங்கு சென்று வாழமுடியும்? அதேதான் பிற உயிர்களுக்கும். ஆக, பிற கிரகங்களில் நாம் வாழ்வதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று.

புதன் கிரகம்
புதன் கிரகம்

ஒரு மனிதன் விண்வெளியைத்தாண்டி வேற்று கிரகத்தில் வாழ்கிறான் என்றால் அவனுக்குள் சூப்பர் சக்தி இருந்தால்தான் முடியும்.

நீங்கள் நினைக்கலாம்... ‘பின் ஏன் மனிதர்கள் செவ்வாயில் வாழ இயலுமா? சந்திரனில் வாழ இயலுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கிறார்கள்?’ என்று... உண்மைதான். அப்படி மனிதர்கள் வாழதகுதி இருக்கும் பட்சத்தில், சில விண்வெளி வீரர்கள் தங்கள் உயிரையும் துட்சமாக நினைத்து அங்கு சென்று தங்கி நமது நலனுக்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொள்வர். அதாவது, வீரர்கள் மட்டுமே சென்று ஆராய்ச்சிகள் மட்டும் மேற்கொள்வர். நாம் குடியேறுவதற்காக எந்த ஆராய்ச்சியும் செய்யப்படுவதில்லை (இப்போதுவரை).

புதன் கிரகம்
புதன் கிரகம்

குறிப்பாக அந்த கிரகத்திலுள்ள தனிமங்கள், எரிபொருட்கள் போன்றவற்றை சேகரிக்கும் முயற்சியில் அந்த விண்வெளி வீரர்கள் ஈடுபடுவர். ஆக இதுபோன்ற சில காரணங்களுக்காகத்தான் ஆராய்கிறார்களே தவிர, நாம் இங்கிருந்து ஆடு, மாடுகளுடன் செவ்வாய் கிரகத்தில் குடியேற அல்ல....!

புதன் கிரகம்
அறிவோம் அறிவியல் 3|அனைத்து கேலக்ஸியும் எப்படிஒரே பாதையில் சுற்றுகிறது? பிரபஞ்சத்தின் மையப்பகுதி எது?

சரி... இப்பொழுது புதனை பற்றி சில தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்...

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன். ஆனால் பூமியை விட சிறியது. இது மிகவும் மெதுவாக சுற்றுவதால் அங்கு ஒரு நாளானது 1,450 மணி நேரம். புதனை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்த கிரகம் பூமியைப் போன்று மேற்பரப்புரப்பைக் கொண்டது என்கிறார்கள். ஆனால் இந்த மேற்பரப்பானது 900 டிகிரி வெப்பத்தை கொண்டிருக்கும் என்கிறார்கள். பரவாயில்லை, கால் வைத்துப்பார்ப்போமே என்றால் காலே இருக்காது... எரிந்து போய்விடும்.!

அப்போ இங்கே குளிரே இருக்காதா என்றால்... இருக்கு, ஒருபக்கம் 1450 மணிநேரம் சூரியன் இருந்தால், அதன் மறுபக்கம் 1450 மணி நேரம் இரவாகதானே இருக்கும்? அப்பகுதியில் குளிர் இருக்கும். அதுவும் குளிர் என்றால் நொடியில் உயிரை பறிக்கக்கூடிய குளிர். கிட்டத்தட்ட -272 செல்ஸியஸ் குளிர் இருக்குமாம். இரவும் பகலும் சந்திக்கும் இடத்தில் உயிர் வாழ சாத்தியமா என்றால் அதுவும் முடியாது காரணம்! வெப்பமான புதன் கிரகத்தில் காற்றானது மிகமிக குறைவு, புவியீர்ப்பு சக்தியும் மிகமிக குறைவு.

அதனால் புதன் குடியேற மட்டுமல்ல.... அங்கு தங்கி ஆராய்ச்சி செய்யவும் முடியாது. இதற்கு துனைக்கோள் அதாவது நிலவு என்பது கிடையாது.

அடுத்த கோள்களைப்பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்....

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com