’SIM இல்லாமல் ஃபோன் அழைப்பு, UPI பயன்பாடு..’ இறங்கியடிக்கும் BSNL! அது எப்படி சாத்தியம்?

ஏர்டெல்லும், ஜியோவும் மாதக் கட்டணங்களை ஏற்றிக்கொண்டிருக்க, வோடஃபோனோ சிக்னல் இன்றி திகைத்துக்கொண்டிருக்க, இறங்கியடித்துக் கொண்டிருக்கிறது BSNL நிறுவனம்.
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்web
Published on

தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு விலையை ஏற்றிக்கொண்டிருந்த போது தான் பொதுமக்களுக்கு BSNL இருப்பதே தெரிந்தது. சூப்பர் ஸ்டார் படத்துக்கு கூடும் கூட்டம் போல, கும்பல் கும்பலாக BSNL நிறுவனத்துக்கு தங்கள் மொபைல் எண்ணை PORT செய்துகொண்டிருந்தார்கள்.

5ஜி இல்லை என்றாலும், 'காசில்ல சாமி' என BSNLக்கு மாறிய நபர்கள் மிக மிக அதிகம். ஸ்பீடு கொஞ்சம் குறைவு என்றாலும், பட்ஜெட்டை பதம் பார்க்காமல் இருந்தது BSNL. தற்போது அடுத்த கட்டமாய் D2D என்னும் தொழில்நுட்பத்தை இறக்கி போட்டியாளர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கவிருக்கிறது BSNL.

BSNL எடுத்த அதிரடி செயல்..

Direct-to-Device (D2D) என்னும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நெட்வொர்க் இல்லாத இடங்களில் இருந்துகூட உங்களால் எமெர்ஜென்சி தொலைப் பேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். சேட்டிலைட்டையே பெரிய டவர்களாக இந்த வசதிக்கு பயன்படுத்தவிருக்கிறது BSNL. செல்ஃபோன் சிக்னல் இல்லாத இடங்களில் WIFI சிக்னலை வைத்து கால் செய்யும் வசதியை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. சிக்னல், WIFI என இரண்டும் இல்லாவிட்டாலும் இந்த D2D மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்கிறது BSNL. வெறுமனே கால் வசதி மட்டும் இல்லையாம். UPI மூலம் பண பரிமாற்றங்களையும் இந்த தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாக்க முடியும் என்கிறது BSNL.

இயற்கை பேரழிவுகள் வாடிக்கையாகிவிட்ட இன்றைய யுகத்தில் இந்த வசதி அதிக அளவில் பயனளிக்கும் என உறுதியளிக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். VIASATஉடன் இணைந்து இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது BSNL.மக்கள் பயன்பாட்டுக்கு இது எப்போது வரும் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

bsnl
bsnl

வரும் மாதங்களில் 5ஜி சேவையும் BSNLல் வரவிருப்பதால், BSNL பயனாளர்களுக்கு சூப்பர் லாட்டரி காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com