பிரதமர் நரேந்திர மோடி அறிமுகபடுத்திய பீம் மொபைல் ஆப்பை இந்தியா முழுவதும் 1.7 கோடி பேர் பதிவிறக்கம் செய்து உலக சாதனை படைத்துள்ளதாக நிதி ஆயோக்கின் தலைமைச்செயல் அதிகாரி அமிதாப் கன்ட் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மின்னணு பரிவர்த்தனையை துரிதமாக்க பிரதமர் நரேந்திர மோடி பீம் ஆப்பை கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தினார். முன்பு ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே பீம் இயங்கி வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் ஐஒஎஸ் தொழில் நுட்பம் கொண்ட ஆப்பிள் மொபைல்களிலும் இயங்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இதுவரை 1.7 கோடி நபர்கள் இதனை தரவிறக்கம் செய்திருப்பதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் கன்ட் தெரிவித்தார்.