ப்ளே ஸ்டோரில் போலி வாட்ஸ்அப் செயலிகள்: எச்சரிக்கை!

ப்ளே ஸ்டோரில் போலி வாட்ஸ்அப் செயலிகள்: எச்சரிக்கை!
ப்ளே ஸ்டோரில் போலி வாட்ஸ்அப் செயலிகள்: எச்சரிக்கை!
Published on

கூகுள் ப்ளே ஸ்டோரில் போலி வாட்ஸ்அப் செயலிகள் இருப்பதாகவும், பயனாளர்கள் தெரியாமல் அவற்றையும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘Update WhatApp Messenger’ என்ற போலி செயலி ‘WhatsApp Inc*’ என்ற டெவலப்பர் பெயரில் ப்ளே ஸ்டோரில் காணப்படுகிறது. இதன் தோற்றம், குறியீடுகள், வண்ணம், முகப்பு ஆகியவை ஒரிஜினல் வெர்ஷனைப் போலவே உள்ளதால் பயனாளர்கள் இந்த செயலியையும் டவுன்லோடு செய்கின்றனர். இதுவரை 5000 பேர் இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்துள்ளனர். மற்றொரு போலி வாட்ஸ்அப் வெர்ஷனை 1 மில்லியன் மக்கள் தரவிறக்கம் செய்துள்ளனர். ஒரிஜினல் வெர்ஷனுக்கு 1 பில்லியன் பயனாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ‘வாட்ஸ்அப் பிசினஸ்’ என்ற செயலியை பல்லாயிரக்கணக்கானோர் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் ஒரு போலி ஆப். வாட்ஸ்அப் பிசினஸ் என்ற செயலியை இன்னும் சோதனை செய்யும் நிலையிலேயே அந்நிறுவனம் வைத்துள்ளது. இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. ஆனால், கூகுள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ்அப் பிசினஸ் என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது. எனவே வாட்ஸ்அப் நிறுவனம், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பின்பற்றுமாறும், போலி செயலிகளை தரவிறக்கம் செய்து ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com