நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கான காரணத்தை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நீர்நிலைகளில் மீன் வேட்டைக்காகக் காத்திருக்கும் நாரைகள் பெரும்பாலும் ஒற்றைக் காலில் நிற்பதை பார்த்திருப்போம். தசை சோர்வைத் தவிர்க்கவே நாரைகள் ஒற்றைக் காலில் நிற்கின்றன என்ற காரணமும், உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே நாரைகள் இந்தச் செயலில் ஈடுபடுவதாகவும் இதுவரை கருதப்பட்டு வந்தது.
அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், உடலின் சக்தியை சேமிக்கும் பொருட்டே நாரைகள் ஒற்றைக்காலில் நிற்பதாகத் தெரியவந்துள்ளது. உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒற்றைக்காலில் நிற்கும்போது நாரைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என்பதையும் அவர்கள் தொடர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.