‘சுமார் 510-அடி விட்டம் கொண்ட ஒரு சிறுகோள் (தோராயமாக ஒரு மைதானத்தின் அளவு) ஒன்று, பூமியை விரைவில் நெருங்கிச் செல்லும். இருப்பினும் இதனால் பூமிக்கு ஆபத்து எதுவும் இருக்காது’ என்று, கடந்த வாரத்தில் நாசா விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.
அவர்கள் சொன்னதுபோலவே, இன்றைய தினம் பூமிக்கு மிக அருகில் வந்த கால்பந்து மைதான அளவுள்ள 2013 FW13 என்ற சிறுகோள், பூமிக்கும் நிலவுக்கும் இடையே வந்துசென்றது. சரியாக பூமியிலிருந்து 6,21,000 மைல்களுக்குள் இது கடந்து சென்றதாக தெரிகிறது. இதுவும் ஆபத்தான தூரமாகவே கருதப்படுகிறது என்றபோதிலும், பூமியில் எவ்வித தாக்கத்தையும் இந்த சிறுகோள் ஏற்படுத்தவில்லை.
பூமியை கடந்து எண்ணற்ற சிறுகோள் மற்றும் விண்கற்கள் கடந்து சென்றாலும் அவைகளால் பூமிக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும் அவ்வப்போது, ஓரிரு சிறுகோள்கள் பூமிக்கு மிக அருகாமையில் செல்லும் பொழுது பூமியின் மின்காந்த விசையால் அவை இழுக்கப்படலாம். இதில் இதுவரை கடந்து சென்ற சிறுகோள்களால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டதில்லை என்பது ஆறுதலான விஷயம். மேலும் சிறுகோள்கள் பற்றிய ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதன் படி, நேற்று 290 மீட்டர் அளவுள்ள சிறுகோள் (விண்கல்) பூமியை கடந்துள்ளது.
2013 ஆம் ஆண்டு இந்த விண்கல் முதல் முறையாக பூமிக்கு அருகே வந்தபோது தொலைநோக்கியால் கண்டறியப்பட்டது. தற்போது இந்த நிகழ்வை "2024 ON" என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.