செயற்கை அறிவு பற்றித் தெரியவில்லை: ஸக்கர் பெர்க்கை விமர்சிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்

செயற்கை அறிவு பற்றித் தெரியவில்லை: ஸக்கர் பெர்க்கை விமர்சிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்

செயற்கை அறிவு பற்றித் தெரியவில்லை: ஸக்கர் பெர்க்கை விமர்சிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்
Published on

செயற்கை அறிவு பற்றி பேஸ்புக் நிறுவனர் ஸக்கர் பெர்க்கிற்கு முழுமையான புரிதல் இல்லை என அமெரிக்காவின் மற்றொரு தொழிலதிபரான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மாஸ்க் விமர்சித்துள்ளார். 

ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை அறிவு குறித்து அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், செயற்கை அறிவு என்பது எதிர்காலத்தில் மனித குலம் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஃபேஸ்புக் லைவில் நெட்டிசன்களில் கேள்விக்குப் பதிலளித்த ஸக்கர்பெர்க்கிடம் இதுபற்றிக் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த ஸக்கர்பெர்க், செயற்கை அறிவு குறித்து எலாஸ் மஸ்கின் பயம் தேவையற்றது என்றும் பொறுப்பற்றது என்றும் கூறினார். 

உலகம் அழிந்துவிடும் என்ற தேவையற்ற பயத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டாம்; செயற்கை அறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்துக்கு நன்மை செய்யும் என்று ஸக்கர்பெர்க் விளாசியிருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த எலாஸ் மஸ்க், செயற்கை அறிவு குறித்து ஸக்கர்பெர்க்கிடம் பேசியதாகவும், அதுகுறித்த முழுமையான புரிதல் அவருக்கு இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் இளம் தொழிலதிபர்களான ஸக்கர்பெர்க் மற்றும் எலான் மஸ்க் இடையிலான இந்த வார்த்தை மோதல் டெக் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com