ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸை அறிமுகம் செய்யதுள்ளது.
ஆப்பிள் வளாகத்தில் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆப்பிள் ஐபோன் X சிறப்பு எடிசன் உட்பட ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 ப்ளஸ் , ஆப்பிள் டிவி ஆகிய கருவிகளுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வெளியிடப்பட்டது.
இதன் சிறப்பம்சங்கள்:
புதிய ஆப்பிள் வாட்ச் 3 ஓஎஸ் 4 கொண்டு இயக்கப்படுகின்ற ஆப்பிள் W2 சிப்செட், பில்ட்-இன் செல்லுலார் கனெக்டிவிட்டி, மெசேஜஸ் மற்றும் முதல் முறையாக சிறி வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் 3 ஆப்பிள் ஏர்பாட்ஸ் உதவியுடன் பாடல்களை இசைக்கும் திறன் கொண்டுள்ளது. இதன் அளவை பொறுத்த வரை ஆப்பிள் வாட்ச்-2 போன்றே காட்சியளிக்கும் என்றும், கோல்டு, சில்வர் மற்றும் கிரே ஆகிய நிறங்களில் அவை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் இந்த வாட்ச் சந்தையில் கிடைக்கும் என்றும் இந்திய சந்தையில் செல்லூலார் வசதி இல்லாத மாடலாக செப்டம்பர் 29ந் தேதி வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. செல்லுலார் மாடலின் விலை 399 டாலர்கள் மற்றும் செல்லுலார் வசதியில்லா மாடலின் விலை 329 டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.