புதிய மாடல் ஐஃபோன், கைக்கடிகாரம் மற்றும் தொலைக்காட்சி வகைகள் போன்றவற்றை ஆப்பிள் நிறுவனம் நேற்று அதிரடியாக வெளியிட்டது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக ஆப் ஆன ஐ டியூன்ஸை அப்டேட் செய்துள்ளது.
ஆப்பிள் சாதனங்களில் ஆன்லைனில் பாடல்களை கேட்டு மகிழும் சேவையான ஐ டியூன்ஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினையும் வெளியிட்டுள்ளது. ஐஃபோன்களில் மட்டுமின்றி விண்டோஸ் மற்றும் மேக் சாதனங்களில் ஐ டியூன்ஸ் 12.7 எனும் புதிய பதிப்பையும் 209 எம்.பி அளவில் வெளியிட்டுள்ளது. இதில் ரிங் டோன்ஸ் எனும் பகுதி நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ டியூன்ஸ் அப்ளிகேஷனை ஆப்பிளின் ஆப்ஸ்டோர் தளத்திலிருந்து நீக்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.