உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 10 புதிய வகை மொபைல் போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
மின்சார ஓயர்கள் இல்லாமல் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதி, ஊடு சிவப்பு கேமிரா, முக அங்கீகாரத்தை வைத்து போனை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த போனை ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை செயல் தலைவர் டிம்குக் அறிமுகம் செய்து வைத்தார். வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஐபோன் 10 மொபைல் போனின் விலை அதிகம் இல்லை. வெறும் 64 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதுதவிர ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ் ஆகிய இரு வகையான மொபைல் போன்களும், ஐபோன் கைகடிகாரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த போன்களிலும் வயர்லெஸ் சார்ஜ் உள்ளிட்ட வசதிகள் புகுத்தப்பட்டுள்ளன.