AI தொழில்நுட்ப வசதிகளுடன் iPhone 16 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள்! விலை எவ்வளவு தெரியுமா?

அதிநவீன ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் ஐஃபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஃபோன் 16 சீரிஸ்
ஐஃபோன் 16 சீரிஸ் முகநூல்
Published on

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஐஃபோன் 16, ஐஃபோன் 16 பிளஸ், புரோ மற்றும் புரோ மேக்ஸ் என 4 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

6.3 இன்ச் டிஸ்பிளே முதல் 6.9 இன்ச் டிஸ்பிளே, இருட்டில் திரையில் மிக குறைந்த வெளிச்சம், வேகமான சார்ஜிங் அம்சம், அதிநவீன கேமரா வசதி, மேம்படுத்தப்பட்ட ஏஐ தொழில்நுட்பத்துடன் ஐஃபோன் 16 ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

ஐஃபோன் 16 சீரிசின்

  • அடிப்படை மாடல் 79,990 ரூபாயும்,

  • பிளஸ் மாடல் 89, 990 ரூபாயும்,

  • புரோ மாடல் 1,19,900 ரூபாயும்,

  • புரோ மேக்ஸ் மாடல் 1,44, 900 ரூபாய்

என இந்திய சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐஃபோன் 16 சீரிஸ்
Hero Splendor Plus Xtec புதிய அப்டேட்டாக ஃப்ரண்ட் டிஸ்க் பிரேக்குடன்.. விலை இவ்வளவு தானா?!

இதற்கான முன்பதிவு வரும் 13ஆம் தேதி தொடங்கும் எனவும், 20 ஆம் தேதி முதல் ஐஃபோன் 16 சிரிஸ் ஃபோன்கள் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஏர்போட்டையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஐஃபோன் 16 சீரிஸ் செல்போன்களை இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com