ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்பட்டது எப்படி?

ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்பட்டது எப்படி?
ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்பட்டது எப்படி?
Published on

ஃபேஸ்புக் நிறுவனத்தில் பயனாளிகளிடம் தகவல்கள் திருடப்பட்டது குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன. 

தாங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ளவதற்காக 2014-ஆம் ஆண்டில் சில கேள்விகளைக் கொண்ட செயலி ஒன்றை பயனர்களுக்கு அனுப்பியது பேஸ்புக். இந்தச் செயலி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான அலெக்சாண்டர் கோகன் என்பவரால் உருவாக்கப்பட்டது. யுவர் டிஜிட்டர் லைஃப் (YOUR DIGITAL LIFE) என்ற பெயரிடப்பட்ட இந்தச் செயலியில், பயனர்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பழங்கவழக்கங்கள் குறித்த தகவல்களை அளித்தனர். இதன் மூலமாக சுமார் 2.7 லட்சம் பேரின் தகவல்கள் நேரடியாகப் பெறப்பட்டன. இவை தவர, தகவல்களை அளித்தவர்களின் நட்புப் பட்டியலில் இருக்கும் நண்பர்களின் தகவல்களையும் இந்தச் செயலி திரட்டியது. ஒட்டு மொத்தமாக 5 கோடி பேரின் தகவல்கள் திரட்டப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. 

இந்தத் தகவல்களை தகவல் ஆய்வு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டாகவுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவுக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அது ஒரு தனியார் நிறுவனம். திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு உளவியல் ரீதியாக ட்ரம்புக்கு ஆதரவான விளம்பரங்கள், வாசகங்கள், இணையப் பக்கங்கள் போன்றவை பயனர்களின் பக்கத்தில் தெரியவைக்கப்பட்டது. "YOUR DIGITAL LIFE" போல ஆயிரக்கணக்கான செயலிகள் பேஸ்புக்கில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் தகவல்களைத் திரட்டி, அவற்றை விற்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இவற்றைக் கொண்டு அரசியல், இனம், மதம், நாடு என தங்களுக்கு ஆதரவான விளம்பரங்கள் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படுகின்றன. பேஸ்புக் சாதாரண பயனர்களுக்கு இலவச சேவை வழங்கினாலும், அதில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலமாக பெரும் வருவாய் ஈட்டுகிறது. அதனால், அனைத்து செயலிகளையும் முடக்குவது அந்த நிறுவனத்தால் சாத்தியமல்ல என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com