கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் தளத்தின் வீடியோ பிளேயர் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் புதுப்பொலிவு பெறுகிறது. மொபைல் அப்ளிகேஷனில் ஃபுல் ஸ்க்ரீனில் (லேண்ட்ஸ்கேப்) வீடியோவை பிளே செய்யும்போது லைக், டிஸ்லைக் மற்றும் கமெண்ட் செக்ஷனையும் இந்த புதிய வெர்ஷனில் பயனர்கள் எளிதாக பெறலாம் எனத் தெரிகிறது.
பழைய வெர்ஷனில் மொபைல் அப்ளிகேஷனை ஃபுல் ஸ்க்ரீனில் பிளே செய்யும் போது லைக், டிஸ்லைக் மற்றும் கமெண்ட் செக்ஷன் ஸ்வைப்-அப் ஜெஸ்டரில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொழில்நுப்ட செய்திகளை வெளியிட்டு வரும் VERGE இதனை தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள் முதல் இந்த புதிய வெர்ஷனுக்கான அப்டேட்டை படிப்படியாக ரோல் அவுட் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில பயனர்கள் போனில் யூடியூப் செயலியை அப்டேட் செய்தாலும் இந்த புதிய வெர்ஷனை பெற முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.