புதிய அப்டேட்களுடன் Android 15... சிறப்பம்சங்கள் என்னென்ன?

உலகின் பலரது கைகளிலும் தவழும் ஸ்மார்ட்போன்களை இயக்குவது Android. இதன் புதிய அப்டேட்களுடன் அடுத்த வெர்ஷனான Android 15 வெளியாகியுள்ளது.
Android 15
Android 15முகநூல்
Published on

உலகின் பலரது கைகளிலும் தவழும் ஸ்மார்ட்போன்களை இயக்குவது Android. இதன் புதிய அப்டேட்களுடன் அடுத்த வெர்ஷனான Android 15 வெளியாகியுள்ளது.

இதில் பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக Private Space என்ற வசதியின் மூலம் ரகசியமாக ஒரு சில அப்ளிகேஷன்களை மறைத்து வைத்துக்கொள்ள முடியும். அதேபோல், Archive ஆப்ஸ் என்ற வசதி மூலம் அடிக்கடி தேவைப்படாத செயலிகளை, டேட்டா அழியாமல், அப்ளிகேஷனை மட்டும் Archive செய்து கொள்ளலாம்.

முக்கியமாக THEFT PRODUCTION என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செல்போனை திருடும்போது, அதனை கண்டறிந்து செல்போன் தானே லாக் ஆகிவிடும். அத்துடன் Split Screen செய்து பயன்படுத்தும் செயலிகளை ஒரே கிளிக்கில் பயன்படுத்தும் வகையிலும் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Android 15
தூக்கத்தில் கனவுகளைப் பகிர்ந்து கொள்ளும் புதிய தொழில்நுட்பம்! சாதித்த ரெம்ஸ்பேஸ் நிறுவனம்!

இதைத்தவிர ADAPTIVE VIBRATION, DEFAULT WALLET APP, AUTOMATIC BLUETOOTH ON உள்ளிட்ட வசதிகள் புதிதாக அறிமுகமாகியுள்ளன. User Interface Design- இல் உள்ள VOLUME CONTROL, WALLPAPER, WIDGET SCREEN ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது பிக்சல் போன்களுக்கு மட்டும் வெளியாகியுள்ள ஆன்ட்ராய்ட் 15, விரைவில் மற்ற நிறுவன போன்களுக்கும் வர உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com