இனி வாட்ஸ்-அப்பில் எல்லா ஃபைல்களையும் அனுப்பலாம்

இனி வாட்ஸ்-அப்பில் எல்லா ஃபைல்களையும் அனுப்பலாம்
இனி வாட்ஸ்-அப்பில் எல்லா ஃபைல்களையும் அனுப்பலாம்
Published on

விரைவில் வாட்ஸ்-அப்பில் எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து விதமான பைல்களையும் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

ஆசியா கண்டத்தில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தும் மொபைல் ஆப்பாக, வாட்ஸ்-அப் முன்னேறி வருகிறது. இதனால் சமீபகாலமாக வாட்ஸ்-அப்பில் பல வசதிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது வாட்ஸ் அப்பில், போட்டோக்கள், வீடியோக்கள் பிடிஎஃப் மற்றும் ஜிஃப் பைல்கள் அனுப்பும் வசதிகள் மட்டும் உள்ளன. இதர பைல்களை பறிமாரிக்கொள்வதற்கு, அதனை வேறு ஒரு இணையதளத்தில் ஏற்றி, அதனுடைய மின்-முகவரியை வாட்ஸ்-அப்பில் பகிரும் வசதி தற்போது அமலில் உள்ளது. இந்தநிலையை மாற்ற நினைத்துள்ள வாட்ஸ்-அப் நிறுவனம், விரைவில் அனைத்து விதமான பைல்களை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து வகை பைல்களும் இனி வாட்ஸ்-அப் மூலமாக ஷேர் செய்ய முடியும் என்றும், ஆன்ராய்டு, விண்டோஸ், ஐபோன் போன்களிலும் இந்த அப்டேட் வேலை செய்யும் எனவும் வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக ஐபோனில் 128MBக்களும், ஆன்ராய்டி-ல் 100MBக்களும், இணையதள வசதி மூலமாக 64MBக்களும் ஷேர் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை, குவைத் உள்ளிட்ட சில நாடுகளில் சோதனை முயற்சியாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ்-அப் நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com