ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்கும் நோக்கத்தில், இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் செல்ஃபோன் தொலைத்தொடர்பு சேவையில், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை வைத்துள்ளன. இந்த இரு நிறுவனங்ககளும் இந்தியாவில் முன்னணி போட்டியாளர்களாக கருதப்படுகின்றன. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் ஜியோவுடன் போட்டியிட்டு வருகின்றது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இரண்டு புதிய ப்ரீபெய்டு திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, இந்த இரண்டு புதிய திட்டங்களும் ரூ. 519 மற்றும் ரூ. 779 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? என்று சுருக்கமாக பார்க்கலாம்.
ஏர்டெல்லின் ரூ.519 திட்டம்
பாரதி ஏர்டெல்லின் ரூ.519 திட்டம், 60 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. அதனுடன் இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 1.5 ஜிபி டேட்டா என்ற வகையில் மொத்தம் 90 ஜிபி, தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளாக இலவச Apollo 24|7 Circle, இலவச Hellotunes, Wynk Music மற்றும் FASTagல் ரூ.100 கேஷ்பேக் ஆகியவை அடங்கும்.
ஏர்டெல்லின் ரூ.779 திட்டம்
பாரதி ஏர்டெல்லின் ரூ.519 திட்டம் போன்றே, ரூ.779 திட்டமும் அதே சேவைகளை வழங்குகிறது. ஆனால், இதில் வேலிடிட்டி மற்றும் மாறுபடுகிறது. 60 நாட்களுக்குப் பதிலாக கூடுதலாக 30 நாட்கள் சேர்த்து 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது.
இதுமட்டுமின்றி 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.299 திட்டத்தையும், 56 வேலிடிட்டியுடன் ரூ. 479 திட்டத்தையும் சிறப்பு சேவையாக பாரதி ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. இந்தத் திட்டங்கள் ஜியோவைவிட மலிவானதாக இல்லையென்றாலும், வாடிக்கையாளர்களை கவருவதற்காக குறைந்த அளவு தொகையில் சேவைகளை வழங்கும் திட்டத்தை பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாதம் இறுதியில் 5G சேவையை அறிமுகம் செய்ய ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.