போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கான புதிய டேட்டா ரோல் ஓவர் திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளது ஏர்டெல்.
இந்த புதிய திட்டத்தின்படி, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தப்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்தின் கணக்கோடு சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மாதம் ஒன்றுக்கு 30 ஜிபி டேட்டா என்ற திட்டத்தில் இருக்கும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளார்கள், குறிப்பிட்ட அந்த ஒரு மாதத்தில் 20 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்தியிருந்தால், மீதமுள்ள 10 ஜிபி டேட்டாவை அடுத்த மாதத்தின் பயன்பாட்டுக் கணக்கோடு சேர்த்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தில் 200ஜிபி டேட்டா வரை ரோல் ஓவர் செய்து கொள்ளலாம் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.