கூகுள் - ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து ஆண்ட்ராய்ட் ஓரியோ கோ இயங்குதளத்துடன் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளன.
ஜியோவின் வருகைக்கு பிறகு பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் மார்க்கெட்டில் சரிவை கண்டுள்ளன. இருப்பினும் ஏர்டெல் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து பல ஆஃபர்களை வழங்கி வருகிறது. இதற்கிடையே ஜியோ நிறுவனம் ஸ்மார்ட்போனை வெளியிட்டு தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை பெருக்கிக்கொண்டது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், இந்தியச் சந்தையில் புதிய உச்சத்தை அடையும் நோக்கத்திலும் ஏர்டெல் நிறுவனம் கூகுளுடன் இணைந்து ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடுகிறது.
ஆண்டாராய்ட் ஓரியோ கோ இயங்குதளத்துடன் மார்ச் மாதம் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனில், மை ஏர்டெல் ஆப், ஏர்டெல் டிவி, விங்க் மியூசிக் உள்ளிட்ட செயலிகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அத்துடன் கூகுள் கோ, கூகுள் மேப்ஸ் கோ, ஜி மெயில் கோ, யூ ட்யூப் கோ உள்ளிட்ட ஆப்-களும் வழங்கப்பட்டிருக்கும். இந்தியாவில் வெளியாகவுள்ள முதல் ஆண்ட்ராய்ட் கோ ஸ்மார்ட்போன் இதுவாகும்.