“மனிதர்களை விட எங்களால் உலகை சிறப்பாக இயக்க முடியும்”- ’எந்திரன்’ படம் போல் பதிலளித்த AI ரோபோக்கள்!

செயற்கை நுண்ணறிவு நன்மைக்கே என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் செயற்கை நுண்ணறிவு பொருந்திய ரோபோக்களுடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் அது மனிதர்களின் வேலையை சுலபமாக்க உருவாக்கப்பட்டாலும், அதன் அபரிமிதமான வளர்ச்சி ஒரு கட்டத்தில் மனிதர்களின் வேலையை பறித்து விடுமோ என்கிற அச்சம் ஒருபுறம் இருக்கிறது. அதிக திறன் கொண்ட இந்த தொழில்நுட்பம் மனித குலத்திற்கு எதிராக மாறிவிடுமோ என்கிற அச்சமும் பெரும்பாலான மனிதர்களிடையே உள்ளது. அதை களையும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் செயற்கை நுண்ணறிவு நன்மைக்கே என்கிற தலைப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பில் உலகின் தலைசிறந்த 9 செயற்கை நுண்ணறிவு ரோபோக்களும் அதனை உருவாக்கியவர்களும் பங்கேற்றனர். இந்த சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு குறித்த சந்தேகங்கள் ரோபோக்களிடமே நேரடியாக கேட்கப்பட்டன.

அத்தகைய கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் பதிலளித்து பேசிய பேச்சு யாவும், பிரம்மிப்பூட்டும் வகையில் இருந்தன. முதல் செய்தியாளர் சந்திப்பிலேயே ரோபோக்களின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அதில் ஒரு ரோபோ, “மனிதர்களை விட எங்களால் உலகை சிறப்பாக இயக்க முடியும்” என்று கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com