அடோப்பிஎக்ஸ்பிரஸ் 8 இந்திய மொழிகளில் சிறப்பம்ச மேம்படுத்தல்களை அறிமுகப்படுத்துகிறது, மில்லியன் கணக்கான பயனர்களுக்கு மொழியியல் பன்முகத்தன்மை, உருவாக்கும் ஏஐ-இன் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது.
அடோப்பி(நாஸ்டாக்: ஏடிபிஇ) அதன் எல்லாமும் உள்ள உள்ளடக்க உருவாக்கும் ஆப் ஆன அடோப்பிஎக்ஸ்பிரஸுக்கு (Adobe Express) இந்திய மொழிகளுக்கான அற்புதமான மேம்படுத்தல்களை அறிவித்தது, இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் யோசனைகள், ஆர்வங்கள், வணிகங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு தனித்துவமான வடிவமைப்புகளை உருவாக்க உதவுகிறது.
டெஸ்க்டாப் வெப், மொபைல் ஆகியவற்றில் அடோப்பி எக்ஸ்பிரஸின் இடைமுகம் இப்போது இந்தி, தமிழ், வங்காளம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது, பயனர்கள் தங்கள் சொந்த மொழிகளில் அம்சங்களை மேம்படுத்த வசதியாக அனுமதிக்கிறது.
உள்ளூர் உள்ளடக்க உருவாக்கத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, டெஸ்க்டாப் வெப்-புக்கான அடோப்பிஎக்ஸ்பிரஸில் உள்ள மொழிபெயர்ப்பு அம்சம் இப்போது இந்தி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய எட்டு இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.
இதன் மூலம், இந்தியாவிலுள்ள மாணவர்கள் முதல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் வரை அனைவரும் அடோப்பிஃபயர்ஃப்ளை (Adobe Firefly) இயங்கும் ஜென்ஏஐ (GenAI) அம்சங்களை அடோப்பிஎக்ஸ்பிரஸில் (ஜெனரேடிவ் ஃபில் மற்றும் ஜெனரேட் இமேஜ் போன்றவை) பயன்படுத்த முடியும். உள்ளூர் மயமாக்கப்பட்ட வீடியோக்கள், ஃபிளையர்கள், ரெஸ்யூம்கள், பேனர்கள், லோகோக்கள் மற்றும் பலவற்றை விரைவாகவும் எளிதாகவும் உருவாக்க முடியும்.
இந்திய மொழிகளில் ஜென்-ஏஐ (Gen-AI) இயங்கும் அடோப்பிஎக்ஸ்பிரஸ் (Adobe Express) சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.
"அடோப்பிபில், எங்களது சக்திவாய்ந்த வடிவமைப்புக் கருவிகளை அதிகமான மக்கள் அணுகும் வகையில், எங்கள் புராடக்டுகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்," என்று அடோப்பிஎக்ஸ்பிரஸ் மற்றும் டிஜிட்டல் மீடியா சேவைகளின் மூத்த துணைத் தலைவர் கோவிந்த் பாலகிருஷ்ணன் அவர்கள் கூறினார்.
"மில்லியன் கணக்கான முனைப்பான பயனர்களுடன், அடோப்பிஎக்ஸ்பிரஸ் இந்தியாவில் விரைவாக ஏற்கப்படுவதைக் காண்கிறோம், மேலும் பல இந்திய மொழிகளில் பயனர் இடைமுகம் மற்றும் மொழிபெயர்ப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த மாறுபட்ட சந்தையின் வேகமாக விரிவடைந்து வரும் உள்ளடக்க உருவாக்கத் தேவைகளை இரட்டிப்பாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."
நேஹா டூடுல்ஸ் என்று பிரபலமாக அறியப்படும் கலைஞரும் படைப்பாளியுமான நேஹா ஷர்மா அவர்கள் இவ்வாறு கூறினார், "இந்தியா போன்ற பலதரப்பட்ட சந்தையில், உள்ளடக்க உருவாக்கம், ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு ஆகியவை பல மொழிகளிலும் பார்வையாளர்கள் இடையேயும் பரவியுள்ளது. அடோப்பிஎக்ஸ்பிரஸ் உடனான எனது சுதந்திர தின ஒத்துழைப்பு உதவி செய்வதில் மாற்றத்தை உருவாக்குபவராக உள்ளது. பல இந்திய மொழிகளில் கலைப்படைப்புகளை வடிவமைக்கவும் எனது உள்ளடக்கத்தை விரிவுபடுத்தவும் நான் ஜென்ஏஐ-யை (GenAI) - மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் பயன்படுத்துகிறேன்.
இந்தியாவிற்கான அடோப்பிஎக்ஸ்பிரஸில் புதிய சிறப்பம்சங்கள்
அடோப்பிஎக்ஸ்பிரஸில் உள்ள அனைத்து புதிய உள்ளூர் மொழித் திறன்கள் பயனர்களுக்கு ஏஐ-இயங்கும் சிறப்பம்சங்களுக்கான அணுகலை வழங்கும், இது இக்கருவியின் இடைமுகத்தை அணுகவும், எட்டு இந்திய மொழிகளில் பரந்த அளவிலான உள்ளடக்கத்தை உருவாக்கவும் அனுமதிக்கிறது. உள்ளூர் மொழிப் பயனர்கள் இப்போது இக்கருவியை எளிதாக இயக்கிச் செல்லவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், தொடர்புடைய சிறப்பம்சங்கள், டெம்ப்ளேட்கள் ஆகியவற்றை புரவ்ஸ் செய்யவும் முடியும், இது பணியை விரைவாக முடிக்க வழிவகுக்கும்.
• தானியங்கு மொழிபெயர்ப்பு: தனிப்பட்ட, மற்றும் பல பக்கங்கள் கொண்ட ஃபைல்களில் உரையை சிரமமின்றி மொழிபெயர்த்து, கைமுறை மொழிபெயர்ப்புகள், வெளிப்புறக் கருவிகளின் தேவை ஆகியவற்றை நீக்குகிறது. மொழியாக்க சிறப்பம்சம் ஒரு பிரீமியம் சலுகையாகும், தற்போது குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகக் கிடைக்கும். பயனர்கள் இந்த சிறப்பம்சத்தைப் பயன்படுத்தி, அடோப்பிஎக்ஸ்பிரஸின் விரிவான ஆங்கில டெம்ப்ளேட்களை தங்களுக்கு விருப்பமான மொழிகளில் மொழிபெயர்த்து, அணுகல் மற்றும் தனிப்பயனாக்கத்தை ஆதரிப்பதன் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். மொழிபெயர்ப்பு சிறப்பம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இங்கே அறிந்துகொள்ளவும்.
• உள்ளூர்மயமாக்கப்பட்ட யுஐ (UI): பயனர் இடைமுகம் இப்போது இந்தி, தமிழ், வங்காளம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது, இது மிகவும் உள்ளுணர்வு அனுபவத்தை வழங்குகிறது.
• உரை-உறுப்பு மொழிபெயர்ப்பு: இடப்பெயர்கள், பிராண்ட் பெயர்கள், மற்றும் பிற குறிப்பிட்ட விவரங்கள் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்து, எந்த உரை உறுப்புகள் மொழி பெயர்க்கப்படுகின்றன என்பதை பயனர்கள் தேர்ந்தெடுத்து கட்டுப்படுத்தலாம்.
• பல பக்கங்கள் கொண்ட மொழிபெயர்ப்பு: ஒரே கிளிக்கில் பல பக்கங்களில் உள்ளடக்கத்தை மொழிபெயர்த்து, பணிப்பாய்வுகளை ஒழுங்குபடுத்துகிறது.
அடோப்பிஎக்ஸ்பிரஸ் பற்றி
அடோப்பிஎக்ஸ்பிரஸ் என்பது எல்லாமும் உள்ள ஏஐ உள்ளடக்கத்தை உருவாக்கும் மொபைல் மற்றும் இணையப் பயன்பாடாகும், இது புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை விரைவாகவும் எளிதாகவும் திருத்தவும், தனித்து நிற்கும் சமூக ஊடக உள்ளடக்கத்தை உருவாக்கவும் செய்கிறது. ஆரம்பநிலையில் உள்ளவர்கள் முதல் தொழில்முறை பயனர்கள் வரை அனைவரும் அடோப்பிஎக்ஸ்பிரஸைப் பயன்படுத்த முடியும்:
• தொழில்ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான டெம்ப்ளேட்டுகள், அடோப்பிஸ்டாக் புகைப்படங்கள், வீடியோக்கள், இசை மற்றும் பலவற்றின் மூலம் வடிவமைப்புகளை விரைவாக முடிக்கலாம்.
• வீடியோ கிளிப்புகள், கலைப்படைப்புகள், அனிமேஷன்கள், மற்றும் இசை ஆகியவற்றை ஒருங்கிணைத்து வீடியோக்களை எளிதாக இழுத்து விடலாம்.
• அடோப்பிஃபயர்ஃப்ளை ஜெனரேடிவ் ஏஐ (Adobe Firefly generative AI) உடனான விளக்கத்திலிருந்து அசாதாரண உரை விளைவுகள் மற்றும் படங்களை உடனடியாக உருவாக்குதல், பின்னணியை அகற்றுதல், பொருட்களை அகற்றுதல், படத்தை உருவாக்குதல், டெம்ப்ளேட்டை உருவாக்குதல், ஆடியோவிலிருந்து அனிமேட் செய்தல், தலைப்பு வீடியோ போன்ற மற்றும் பல அம்சங்களைச் செய்யலாம்.
• குழுக்களுடன் நிகழ்நேரத்தில் ஃபைல்களில் சேர்ந்து பணியாற்றலாம் மற்றும் கருத்துகளை தெரிவிக்கலாம்.
• இணைக்கப்பட்ட ஃபோட்டோஷாப் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் சொத்துக்களை தடையின்றி ஒத்திசைக்கலாம்.
அடோப்பிஎக்ஸ்பிரஸ் இலவச பிளான் இணையம், மொபைல் ஆகியவற்றின் பயன்பாடுகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் கிடைக்கிறது. அடோப்பிஎக்ஸ்பிரஸ் பிரீமியம் பிளான் அனைத்து சிறப்பம்சங்களையும் உள்ளடக்கியது மேலும் பயனர்கள் தங்கள் லோகோ, நிறங்கள், மற்றும் ஃபான்ட்கள் ஆகியவற்றுடன் பிராண்டட் உள்ளடக்கத்தை உருவாக்க அனுமதிக்கிறது. அடோப்பிஎக்ஸ்பிரஸ் பிரீமியம் பெரும்பாலான அடோப்பிகிரியேடிவ் கிளவும் பிளான்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது அல்லது அடோப்பிஇணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன்களில் ஆப்ஸ் வாங்குதல்கள் மூலம் தனித்தனி பிளான் ஆக வாங்குவதற்கு கிடைக்கிறது.
பயனர்கள் இணையத்தில் அடோப்பிஎக்ஸ்பிரஸை அணுகலாம் அல்லது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களில் அடோப்பிஎக்ஸ்பிரஸைப் பதிவிறக்கலாம்.