வரும் 2026 வாக்கில் இந்தியாவில் சுமார் ஒரு பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவார்கள் என ஆய்வு மேற்கொண்டதன் மூலம் தெரிவித்துள்ளது Deloitte. இந்தியாவில் தற்போது 1.2 பில்லியன் மக்கள் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் 750 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்களும் அடங்குவர்.
அதே நேரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி ஸ்தலமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Deloitte-இன் 2022 குளோபல் டி.எம்.டி (டெக்னாலஜி, மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட், டெலிகாம்) ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
நகரப் பகுதிகளை காட்டிலும் ஊரக பகுதிகளின் பங்கு இந்த வளர்ச்சியில் அதிகம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான இணைய சேவை பயன்பாடு காரணமாக ஸ்மார்ட்போன்களுக்கான டிமெண்ட் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கற்றல் மற்றும் ஆரோக்கியம் சேர்ந்த தேவைகள் இந்த டிமெண்டை அதிகரிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
மேலும் ஸ்மார்ட்போன் பயனர்களில் 80 சதவிகிதம் பேர் புதிய சாதனத்திற்கு மாற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் Feature (கீபோர்ட் போன்) போனின் பயன்பாடு குறையும் என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமானதும் மாற்றம் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.