80 முறை மீண்டும் மீண்டும் அச்சிடத் தகுந்த காகிதம்: சாதனை படைத்த ஆய்வாளர்கள்

80 முறை மீண்டும் மீண்டும் அச்சிடத் தகுந்த காகிதம்: சாதனை படைத்த ஆய்வாளர்கள்
80 முறை மீண்டும் மீண்டும் அச்சிடத் தகுந்த காகிதம்: சாதனை படைத்த ஆய்வாளர்கள்
Published on

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

இது சந்தைக்கு வந்தால், செய்தித்தாளுக்காக அதிகக் காகிதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும் என கருதப்படுகிறது. இ-பேப்பர், இ-கோப்புகள் என்று மாறி வரும் உலகில், அமெரிக்கா ஒரு ஆண்டுக்கு 70 மில்லியன் டன் காகிதங்களை பயன்படுத்துகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com