செவ்வாய்க்கிரகம், மற்றும் சந்திரனை முப்பரிமாணத்தில் பார்க்க வசதியாகத் தயாரிக்கப்பட்டு வரும் மென்பொருளுக்கான பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும் என இஸ்ரோ தெரிவித்தள்ளது.
செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பியுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள் 2 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. மங்கள்யான் அனுப்பும் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அந்த கிரகத்தின் முப்பரிமாண காட்சியை இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் தயாரித்து வருகிறது.
இதற்காக வேதாஸ் என்ற பெயரிலான மென்பொருள் கடந்த ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களை பயன்படுத்தி, ஓராண்டுக்குள் 3டி வசதி முடிக்கப்படும் என இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க் கிரகம் மட்மின்றி நிலவின் முப்பரிமாணக் காட்சியையும், ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் தயாரித்து வருகிறது. இந்தக் காட்சிகளை ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரின் இணையதளத்தில் பார்க்கலாம்.