ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம்

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம்
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம்
Published on

தனிநபர் ரகசியம் காப்பதில் உள்ள விதிமுறைகளை மீறியதாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பயனாளர்களின் தனிநபர் ரகசியங்களை பாதுகாக்க தவறியதற்காகவும், தகவல் திருட்டு குறித்து பயனாளர்களுக்கு தெரிவிக்காததாலும் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்த்தக கமிஷன், பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. 

இந்த வர்த்தக கமிஷன் விதித்த அபராதத்தில் இதுவே மிக அதிகபட்ச தொகை. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காமல் தடுக்கவும், ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் பாதுகாப்பு முறையை மாற்றவும் இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என மத்திய வர்த்தக கமிஷன் தெரிவித்துள்ளது. இந்த அபராதத்தை ஏற்பதாகவும், இது ஃபேஸ்புக் நிறுவனத்தின் சகாப்தத்தில் புதிய அத்தியாயம் என்றும் அதன் தலைமை அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க், தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com