இனி WhatsApp-ல் ஒரே நேரத்தில் 32 பேர் பேசலாம்!

ஒரே நேரத்தில் 32 பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் ஆடியோ சாட் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்பில் குழு உரையாடல், குழுவான வாய்ஸ், வீடியோ கால் வசதி நீண்ட காலமாகவே இருக்கிறது. தற்போது வந்திருக்கும் ஆடியோ சாட் அம்சத்தில் ரிங்டோன் ஒலிக்காமல், அதற்கு பதிலாக குழு உறுப்பினர்களுக்கு PUSH NOTIFICATION அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp
WhatsApp முகநூல்

ஆடியோ சாட்டில் இணைந்தவுடன் குழுவில் உள்ள அனைவருடனும் நேரடியாக பேசவும், குழுவில் குறுஞ்செய்தி அனுப்பவும் முடியும்.

WhatsApp
ஸ்மார்ட்ஃபோன்களில் பிரபலமாகும் இ - சிம்கள்! eSIM என்றால் என்ன? பயன்கள் என்ன?

மேலும் குழுவில் உள்ள உறுப்பினர் 33 முதல் 128 பேர் வரை இருந்தால் மட்டுமே இந்த ஆடியோ சாட் வசதியை பயன்படுத்த முடியும் என்றும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் ஆகிய இரண்டு தளங்களிலும் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com