பப்ஜி கேம் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.
லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் போக்கையடுத்து இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. இந்தியாவின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பப்ஜி என்ற பிரபல ஆன்லைன் கேம் உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் பப்ஜி கேமை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.