எதிரே இருப்பது என்னவென்று தெரிவித்து பார்வை மாற்றுத்திறனாளிக்கு உதவும் 'பி மை ஐஸ்' செயலி

எதிரே இருப்பது என்னவென்று தெரிவித்து பார்வை மாற்றுத்திறனாளிக்கு உதவும் 'பி மை ஐஸ்' செயலி
எதிரே இருப்பது என்னவென்று தெரிவித்து பார்வை மாற்றுத்திறனாளிக்கு உதவும் 'பி மை ஐஸ்' செயலி
Published on

பார்வைச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பி மை ஐஸ் ( BE MY EYES) என்ற செயலி பெரிதும் உதவி வருகிறது. பார்வை சவால் உள்ளவர்கள் தங்களது செல்போனில் பி மை ஐஸ் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, வீடியோ வசதியை திறக்க வேண்டும். இதன் பின்னர் அவர்கள் தங்களது கைகளிலோ அல்லது சட்டை பாக்கெட்டிலோ செல்போனை வைத்துவிட்டால் அந்த செயலி மூலம் எதிரே இருப்பது என்ன என்பது குறித்து அந்த ஆப் தகவல்களை அளிக்கும்.

இதன் மூலம் அந்த நபர் நேராக செல்லலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானித்து செல்லும் இடத்திற்கு சரியாக சென்றுவிடலாம். பால் அட்டைப்பெட்டியில் காலாவதி தேதியைப் படிப்பதில் இருந்து சட்டையின் நிறத்தை விவரிப்பது வரை இந்த் ஆப் பல உதவிகளை செய்யும். 2015 இல் Hans Jorgen Wiberg ஆல் உருவாக்கப்பட்ட Be My Eyes செயலி, சிறிய, அன்றாடப் பணிகளில் உதவி தேவைப்படும் பார்வை சவால் உடைய மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com