தனி ஒருவனின் வாழ்க்கைப் பயணத்திற்கு பெற்றோர்கள் எப்படி வழிகாட்டிகளாக இருக்கிறார்களோ அதற்கு இணையாக இரண்டாம்
பெற்றோரான ஆசிரியர்களும் திகழ்கின்றனர். அவர்களது கையில் இருக்கும் சாக்பீஸ்கள் வழிகாட்டும் சுட்டுவிரலின்
நீட்சியாகத்தான் தெரிகின்றன.
உழவுத்தொழிலும் கற்பித்தில் தொழிலும் ஒன்றானதே. ஏனென்றால் கற்பித்தல்
என்பது விதைதலுக்கு ஓப்பான செயல். அதனால்தான் அன்னைக்கு அடுத்த நிலையில் ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் என்ற சிற்பிகளை சிறப்பிக்கும் பொருட்டு ஆண்டுதோறும்
நல்லாசிரியர்களை தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி.
கீழ்கண்ட பிரிவுகளில் தனித்து விளங்கும் ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு விருதாளர்களாக தேர்வு
செய்யப்படுகிறார்கள்.
புதுமை
கிராம சேவை
பழங்குடி மேம்பாடு
பெண்கல்வி
செயலூக்கம்
மொழித்திறன் மேம்பாடு
அறிவியல் விழிப்புணர்வு
படைப்பாற்றல்
சிறப்புக் குழந்தைகள்
மற்றும்
சிறப்பாசிரியர் விருது
ஆசிரியர்கள் விருதாளர்களுக்கான தேர்வுக்காக வரவேற்கப்படுகின்றனர்.
அரசு, அரசு உதவி பெறும், மற்றும் மெட்ரிக் ஆகிய மூன்று வகைப் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் இதற்குத்
தகுதியானவர்கள், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் ,
தலைமை ஆசிரியர்களும் இதற்குப் பொருத்தமானவர்களே.
விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விருது பிரிவுகள் இத்துடன்
தகுதியானவர்கள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிறைவு செய்து அனுப்ப வேண்டும்.
விருதுக்குத்
தகுதியானவர்களைப் பிறரும் பரிந்துரை செய்யலாம். ஆனால் சிபாரிசுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பத்தோடு
சான்றாவணங்களாக புகைப்படங்கள், காணொலிக் குறுந்தகடுகள், ஊடக வெளியீடுகள்,சான்றிதழ்கள் இணைத்து தொகுத்து
அனுப்பலாம்.
நடுவர்களாக சமூகத்தின் பல்துறை சாதனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு
நியமிக்கப்பட்டுள்ளது. நடுவர்களின் முடிவே இறுதியானது.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 20 July 2024