திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் இளைஞர் ஒருவர் ப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டினால் தற்கொலை செய்து கொண்டாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் டீ கடை நடத்தி வருபவர் அலமாதி. தனது குடும்பத்தினருடன் பழைய அலமாதியில் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(25) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தினேஷ் மும்பையில் பொறியாளராக பணி செய்து வந்த நிலையில், தீபாவளி விடுமுறைக்காக அலமாதிக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை தமது வீட்டில் மின் விசிறியில் புடவையில் தூக்கிட்ட நிலையில் தினேஷ் மீட்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து தினேஷின் தந்தை திருநாவுக்கரசு, சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தீபாவளி விடுமுறைக்கு வந்த தமது மகன் கடந்த 10 நாட்களாக செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இந்த
நிலையில் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் புகாரில் கூறியுள்ளார்.. இந்த புகாரின் பேரில் சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டினால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.