`நன்னடத்தை சான்றிதழ் கட்டாயம்’- இரவோடு இரவாக காவல் நிலையத்தில் குவிந்த இளைஞர்கள்!

`நன்னடத்தை சான்றிதழ் கட்டாயம்’- இரவோடு இரவாக காவல் நிலையத்தில் குவிந்த இளைஞர்கள்!
`நன்னடத்தை சான்றிதழ் கட்டாயம்’- இரவோடு இரவாக காவல் நிலையத்தில் குவிந்த இளைஞர்கள்!
Published on

ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் சேர நன்னடத்தை சான்றிதழ் கட்டாயம் என்பதால், காவல் நிலையத்தில் குவிந்த இளைஞர்களுக்கு இரவோடு இரவாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமானது இன்று (15.11.2022) அதிகாலை முதல் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் 30.11.2022 வரை நடைபெற உள்ளது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் ஆள் சேர்ப்பு முகாமுக்கு வரும் இளைஞர்கள் காவல் நிலையத்தில் நன்னடத்தைச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என கூறியதால், ஆன்லைன் மூலமாகவும் மற்றும் அருகில் உள்ள காவல் நிலையத்திலும் 24 மணி நேரமும் நேரடியாகவும் நன்னடத்தை சான்றை பெற்றுக்கொள்ளலாம் என வேலூர் மாவட்ட SP ராஜேஷ் கண்ணண் கூறியதை அடுத்து, விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சான்றிதழ்க்காக குவிந்தனர்.

இதேபோல் பாகாயம், குடியாத்தம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் இளைஞர்கள் குவிந்தனர். முன்னதாக வழக்கறிஞர் தரும் சான்றிதழ் மட்டும் போதும் என இளைஞர்கள் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் நன்னடத்தை சான்றிதழ் கட்டாயம் என்றும் கூறப்பட்டதால், காவல் நிலையத்தில் அனைவரும் இரவோடு இரவாக குவிந்தனர்.

மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள இருக்கும் இளைஞர்களுக்கு நன்னடத்தை சான்றிதழ் (செல்ப் போலீஸ் வெரிஃபிகேஷன்) நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com