கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இளைஞர்கள் தானாக முன்வந்து உதவி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை அதிதீவிர மறைந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விடாமல் பெய்து வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கி இருக்கின்றன. குறிப்பாக வரலாறு காணாத அளவுக்கு பாலாற்றில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. பலரும் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் அனாதைகளாக சாலையோரங்களில் சுற்றித்திரியும் மனநிலை, பாதிக்கப்பட்டவர்கள் வயதான முதியவர்கள் நிலை, மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பாக அவர்களை கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொட்டும் மழையில் இரவு நேரத்தில் ஒதுங்குவதற்கு இடம் இல்லாத நிலையில், கிடைக்கும் இடத்தில் ஒதுங்கி குளிரில் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். இவர்களின் நிலையை அறிந்த வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட நத்தாநல்லூர் கிராமத்தைச் சார்ந்த சரன் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர், வாலாஜாபாத் ஒன்றியம் காஞ்சிபுரம் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற சாலையோரத்தில் வசிக்கக்கூடிய வயதான முதியவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர்.
இரவு நேரத்தில் கொட்டும் மழை என்றும் பாராமல், தேடிச்சென்று அவர்களுக்கு தேவையான உணவையும் குளிருக்கு இதமாக போர்வையையும் வழங்கி வருகிறார்கள். சவாலான இந்நேரத்தில் சமூக கடமை ஆற்றும் தன்னிகரில்லா இளைஞர்கள் பொதுமக்கள் மனதார பாராட்டுகிறார்கள். வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து அவர்களுக்கு சேவை புரிவதன் மூலம் அவர்களின் ஆசியை பெறுவது மிக மனநிறைவான அனுபவமாக இருப்பதாக தெரிவிக்கும் இளைஞர்கள் தெரிவிக்கிறார்கள்.