கர்ப்பமாக்கியவரை சேர்த்து வைக்ககோரி இளம் பெண் தர்ணா

கர்ப்பமாக்கியவரை சேர்த்து வைக்ககோரி இளம் பெண் தர்ணா
கர்ப்பமாக்கியவரை சேர்த்து வைக்ககோரி இளம் பெண் தர்ணா
Published on

சென்னை பூவிருந்தவல்லியில் திருமண ஆசைக்கூறி கர்ப்பமாக்கிய காதலனை சேர்த்து வைக்ககோரி இளம் பெண் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் பாஷா. இவரது மகள் லத்திபா (21). இவருக்கும் சென்னை பம்பல் பகுதியை சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் அரவிந்த் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.  இதனால் கடந்த 2017ஆம் ஆண்டே லத்திபா கர்ப்பமாகியுள்ளார்.

இதனை லத்திபா, அரவிந்த் வீட்டில் கூறியதாகவும் அதற்கு அரவிந்த் வீட்டில் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.இதில் ஆத்திரம் அடைந்த அரவிந்த், லத்திபாவை அழைத்து சென்று அடித்ததில் லத்திபாவிற்கு கருக் கலைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் அரவிந்த் லத்திபாவை சந்தித்து நடந்தவற்றிக்கு மன்னிப்பு கேட்டதோடு,திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார். இதனை நம்பி மீண்டும் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனால் லத்திபா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். 

ஆனால் மீண்டும் அரவிந்து திருமணம் செய்து கொள்ள மறுத்த நிலையில் அரவிந்த் குறித்து பூவிருந்தவல்லி மகளிர் காவல் நிலையத்தில் லத்திபா புகார் அளித்தார். ஆனால் அங்கு உரிய விசாரணை நடத்தப்படவில்லை எனவும் . 

இதனை அடுத்து இன்று விசாரணைக்கு வந்த லத்திபா, அரவிந்தை தன்னுடன் சேர்த்து வைக்கோரி காவல் நிலைய வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அரவிந்த் திருமணம் செய்யாத நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டத்தை கலைத்தனர். இந்தச் சம்பவத்தால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com