பெண் குழந்தையை ரூ.7 ஆயிரத்திற்கு விற்க முயற்சி - இளம் ஜோடி கைது

பெண் குழந்தையை ரூ.7 ஆயிரத்திற்கு விற்க முயற்சி - இளம் ஜோடி கைது
பெண் குழந்தையை ரூ.7 ஆயிரத்திற்கு விற்க முயற்சி - இளம் ஜோடி கைது
Published on

திருவள்ளூர் அருகே 3 மாத பெண் குழந்தையை ரூ.7 ஆயிரத்திற்கு விற்க முயன்ற இளம் ஜோடியை குழந்தைகள் நல காப்பகத்தினர் பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு 181 என்ற எண்ணில் வரும் புகார்கள் மீது விரைந்து சென்று நடவடிக்கை எடுத்துக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த புட்லூர் ரயில் நிலையத்தில் 3 மாத பெண் குழந்தையை 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்போவதாக இளம் வயதுடைய ஆண் மற்றும் பெண் தெரிவிப்பதாகவும், அவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல மையத்திற்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து மையத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட 7 பேர் புட்லூர் ரயில் நிலையத்திற்கு சென்று குழந்தையை விற்க முயன்ற இருவரையும் பிடித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த லட்சுமி (19) மற்றும் பக்ருதின் (20) என்பது தெரியவந்தது. அத்துடன் அவர்களின் 3 மாத பெண் குழந்தையை விற்க முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தை மற்றும் தாயை அருகிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com