பொங்கலுக்கு பின்பும் பரிசுத் தொகையை பெறலாம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

பொங்கலுக்கு பின்பும் பரிசுத் தொகையை பெறலாம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
பொங்கலுக்கு பின்பும் பரிசுத் தொகையை பெறலாம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
Published on

பொங்கலுக்கு பின்பும் பரிசுத் தொகையை பெறலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகைக்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து அப்பரிசுத் தொகையை பெறுவதற்கான டோக்கன்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று கொடுக்கும் பணிகள் நடைபெற்றன. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “பொங்கலுக்கு முன் ரூபாய் 2,500 பரிசுத்தொகுப்பு பெற முடியாதவர்கள் ஜன19 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம். ஜனவரி 4 முதல் காலையில் 100 பேருக்கும், மதியம் 100 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்” என்றார்.

அதிமுக, பாஜக கூட்டணி சலசலப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, “ தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவு செய்யப்படும். அதுவரை பழைய கூட்டணியினர் நண்பர்களாக இருப்பர். கூட்டணியில் இறுதிநேரத்தில் தொகுதிகள் வழங்குவதில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com