தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
அச்சுறுத்தல் காரணமாக அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் அண்ணாமலைக்கு பாதுகாப்பு தருவர். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து, அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.