தன் எழுத்துக்களால் தமிழுலகை கட்டிப்போட்ட எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு!

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மதுரையில் உள்ள தனது வீட்டில் இன்று மறைவுற்றார். தனது அபாரமான எழுத்தாற்றல் மூலமாக தமிழுலகை ஆண்டு வந்த இந்திரா சௌந்திர்ராஜனின் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாக அமைந்துள்ளது.
இந்திரா சௌந்தர்ராஜன்
இந்திரா சௌந்தர்ராஜன்pt web
Published on

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மதுரையில் உள்ள தனது வீட்டில் இன்று மறைவுற்றார். தனது அபாரமான எழுத்தாற்றல் மூலமாக தமிழுலகை ஆண்டு வந்த இந்திரா சௌந்திர்ராஜனின் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாக அமைந்துள்ளது.

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் சேலத்தினை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது இயற்பெயர் சௌந்தர்ராஜன். மதுரையில் உள்ள டிவிஎஸ் நகர்ப் பகுதியில் வசித்து வந்தார். டிவிஎஸ் நிறுவனத்தில் துணைப் பொறியாளராகப் பணியாற்றியவர். எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது தாயின் பெயரான இந்திரா எனும் பெயரை தனது பெயருடன் இணைத்து இந்திரா சௌந்தர்ராஜன் எனும் பெயரில் கதைகளை எழுதியவர்.

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைந்தார்
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைந்தார்

இந்திரா சௌந்தர்ராஜனின் ‘ஒன்றின் நிறம் இரண்டு’ என்ற கதை 1978 ஆம் ஆண்டு கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வென்றது. ‘என் பெயர் ரங்கநாயகி’ எனும் கதை தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலிக்கான மூன்றாம் பரிசினைப் பெற்றது. இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த எழுத்தாளர் விருதினையும், இன்னும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது கதை வசனத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிருங்காரம் எனும் திரைப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது.

இந்திரா சௌந்தர்ராஜன்
காலமானார் நடிகர் டெல்லி கணேஷ்.. உடலைப் பார்த்து கதறி அழும் உறவினர்கள்! பொதுமக்கள் அஞ்சலி!

அவரது படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வந்துள்ளன. என் பெயர் ரங்கநாயகி, மர்ம தேசம் உள்ளிட்ட படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. அவரது எழுத்தில் 3000க்கும் மேற்பட்ட எபிசோடுகளை எழுதியுள்ளதாக 2011 ஆம் ஆண்டு அளித்த அளித்த நேர்காணல் ஒன்றிலேயே தெரிவித்துள்ளார். இவரது எழுத்தில் வெளிவந்த அத்திப்பூக்கள் தொடர் அந்த காலக்கட்டத்தில் உச்சத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திரா சௌந்தர்ராஜன் எழுத வந்த காலக்கட்டத்தில் மர்மக் கதைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்த காலக்கட்டம். அதனையொட்டி தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பத்தில் அமைத்து இருந்தாலும், அதில் நிறைவு ஏற்படாமல் சரித்திரம், ஆன்மீகம், அமானுஷ்ங்களது பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். இக்கதைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே அதைக் களங்களாகக் கொண்ட கதைகளை எழுதுவதில் வல்லவராக மாறினார். ஆன்மீக சொற்பொழிவாளராகவும் இந்திரா சௌந்தர்ராஜன் திகழ்ந்துள்ளார். அவரது கதைகள் பல தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன.

இந்திரா சௌந்தர்ராஜன்
“திடீரென்று இப்படி.. எதிர்பார்க்கவே இல்ல.. எங்களுக்கு கஷ்டம்தான்”- மறைந்த டெல்லி கணேஷின் மகன் வேதனை!

இந்நிலையில்தான் நேற்று மதுரையில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார் இந்திரா சௌந்தர்ராஜன். தற்போது 66 வயதாகும் இந்திரா சௌந்தர்ராஜனின் திடீர் மறைவு எழுத்துலகிலும் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு உரிய மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. நவம்பர் 13 ஆம் தேதி அவரது பிறந்தநாள் வரும் நிலையில் நவம்பர் 10ம் தேதியான இன்று அவர் மறைந்திருப்பது, பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்திரா சௌந்தர்ராஜன்
சிறந்த நடிகர்.. நடிகர்களது ஆதர்ச டப்பிங் கலைஞர்... மறைந்தார் டெல்லி கணேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com