திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கட்டப்பட்ட உலகத் தரம் வாய்ந்த கழிப்பிடங்களைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய இடங்களில் கடந்த 2013-14ஆம் ஆண்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மூன்று கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. அவற்றிற்கு திறப்பு விழா செய்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் பயன்பாட்டிற்கு திறந்துவிடாததால், பொதுமக்கள் இயற்கை உபாதைகளுக்கு திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை நீடிப்பதாகவும், அதனால் தொற்று நோய்கள் பரவுவதாகவும் அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, தண்ணீர் பற்றாக்குறையால் கழிப்பிடங்கள் பயன்பாடற்று இருப்பதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.