உலக மின்வாகன தினம் | மின் வாகனங்களுக்கு மாறும் நுகர்வோர் - காரணம் என்ன?

நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் சென்னை மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த நுகர்வோர்: 96% பேர் இறுதி-இலக்கு விநியோக (Last Mile Delivery) நிறுவனங்களை மின்வாகனங்களுக்கு மாறுமாறு வலியுறுத்துகின்றனர்.
Electronic Vehicle
Electronic Vehiclept desk
Published on

தமிழ்நாட்டில் காற்று மாசுபாடு மற்றும் கரிம உமிழ்வைக் குறைப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக ’கடைசி மைல் விநியோகத் துறை’ மின்வாகனங்களுக்கு (EVs) யை மாற்றுவது இருக்கும் என்று சென்னை மற்றும் கோயம்புத்தூர் முழுவதும் நடைபெற்ற ஒரு நுகர்வோர் கணக்கெடுப்பில் 96% மக்கள் கூறியுள்ளனர்.

மேலும், கணக்கெடுக்கப்பில் 65% நுகர்வோர் உமிழ்வு மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான தீர்க்கமான வழிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு மாறத் தயாராக உள்ளதாக கூறியுள்ளனர்.

தனித்தனியே பார்த்தால், சென்னையில் இந்த எண்ணிக்கை 66.7% ஆகவும், கோவையில் 64.7% ஆகவும் இருக்கின்றது.

மேற்கண்ட நுகர்வோர் கணக்கெடுப்பின் முடிவுகள், உலக மின்வாகன தினமாக அனுசரிக்கப்படும் செப்டம்பர் 9 ஆம் தேதி (நேற்று) நடைபெற்ற இணைய-வழி கருத்தரங்கின் ஒரு பகுதியாக, ​​Sustainability Mobility Network (SMN) அமைப்பால் வெளியிடப்பட்டது.

இறுதி-இலக்கு விநியோகம் / கடைசி-மைல் விநியோகம் (Last Mile Delivery) என்பது விநியோகம் செய்யப்பட வேண்டிய பொருட்களை விநியோக மையத்திலிருந்து வாடிக்கையாளரின் வீட்டுவாசலுக்கே கொண்டு செல்வதைக் குறிக்கிறது.

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, வளிமண்டலத்தில் 5,00,000 டன்கள் கரியமில வாயு (CO2), எனப்படும் ஒரு பசுமைஇல்ல வாயு, வெளியேற்றத்திற்கு இந்த இறுதி-இலக்கு விநியோகத் துறை மட்டுமே காரணமாக உள்ளது.

Electronic Vehicle
ஜெ.என்.என் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்கவிழா!

இறுதி-இலக்கு விநியோகத் துறை மின்வாகனங்களுக்கு மாறுவதற்கான முன்னெடுப்புகள் பற்றிய நுகர்வோர் உணர்வுகள் மற்றும் கருத்துகள்' என்ற தலைப்பில், இறுதி-இலக்கு விநியோக நிறுவனங்களின் ஓட்டுனர்கள் மின்வாகனங்களுக்கு மாறுவதைச் சுற்றியுள்ள முக்கிய குறியீடுகள் பற்றி மதிப்பிடுவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பொருட்களின் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள Amazon, Flipkart, Zomato, Swiggy, Nykaa, Ajio, BigBasket, Jio-Mart, Snapdeal, Zepto, DHL/Blue Dart, Swiggy Mart, Grofers/Blinkit, DTDC, TataCliq, Deliver, Dunzo, Fedex போன்ற நிறுவனங்களால், இறுதி-இலக்கு விநியோகங்களில் ஏற்படும் காற்று மாசுபாடு மற்றும் மின்வாகன்களுக்கு மாறுவதற்கான தேவையை இந்த கணக்கெடுப்பு அளவிடுகிறது.

சென்னையில் நடைபெற்ற கணக்கெடுப்பின் சிறப்பம்சங்கள்

பதிலளித்தவர்களில் 96.2% பேர், விநியோக நிறுவனங்களின் ஓட்டுனர்கள் மின்வாகனன்களுக்கு மாறுவது காற்று மாசுபாடு மற்றும் உமிழ்வைக் குறைப்பதில் மிகவும் முக்கியமானது (Very Important) மற்றும் ஓரளவு முக்கியமானது (Somewhat Important) என்று கூறியுள்ளனர்.

66.7% பதிலளித்தவர்கள் தாங்கள் தீர்க்கமான உமிழ்வு குறைப்பு குறிக்கோள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு மாற விருப்புவதாக தெரிவித்தனர். பதிலளித்தவர்களில் 49.2% பேர் நகரத்தில் காற்றின் தரம் பற்றிய விழிப்புணர்வை அதிகம் பெற்றுள்ளனர். இது புனேவுக்கு அடுத்தபடியாக நாட்டில் இரண்டாவது மிக உயர்ந்த விழிப்புணர்வு மதிப்பீடாக கண்டறியப்பட்டுள்ளது. 52.4% நுகர்வோர் நிறுவனங்களின் மின்வாகன மாற்றத் திட்டங்களைப் பற்றி தகவல்களைப் பெற்று அதனை அறிந்திருக்கிறார்கள்.

சென்னையில் பதிலளித்தவர்களில் 37.4% பேர், நிறுவனங்களிடமிருந்து அவர்தம் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து மிகவும் பயனுள்ள தகவலைப் பெற்றதாகக் கூறியுள்ளனர். பதிலளித்தவர்களில் 32% பேர் நிறுவனத்தின் மின்வாகன மாற்றத்திற்கான முயற்சிகளிலும் அவர்களது செயல்பாடுகளிலும் முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். பதிலளித்தவர்களில் 52.4% பேர், நியாயமான மின்வாகன மாற்றத்தை உறுதி செய்வதுடன் அதன் தொழிலாளர்களை தீவிரமாக வழிநடத்தும் ஒரு நிறுவனத்திடமிருந்து பொருட்கள் வாங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறினர்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற கணக்கெடுப்பின் சிறப்பம்சங்கள்!

பதிலளித்தவர்களில் 94.2% பேர், விநியோக நிறுவனங்களின் ஓட்டுனர்கள் மின்வாகனன்களுக்கு மாறுவது காற்று மாசுபாடு மற்றும் உமிழ்வைக் குறைப்பதில் மிகவும் முக்கியமானது (Very Important) மற்றும் ஓரளவு முக்கியமானது (Somewhat Important) என்று கூறியுள்ளனர். 64.7% பதிலளித்தவர்கள் தாங்கள் தீர்க்கமான உமிழ்வு குறைப்பு குறிக்கோள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு மாற விருப்புவதாக தெரிவித்தனர். 35.8% மக்கள் என்கிற மதிப்பீட்டுடன், காற்றின் தரம் குறித்த விழிப்புணர்வில் கோவை மூன்றாவது இடத்தில் உள்ளது 57.9% நுகர்வோர் நிறுவனங்களின் மின்வாகன மாற்றத் திட்டங்களைப் பற்றி தகவல்களைப் பெற்று அதனை அறிந்திருக்கிறார்கள்.

Electronic Vehicle
’இப்படியொரு வசதியா!’.. விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் அருவி போல் கொட்டிய நீர்! வீடியோ

கோவையில் பதிலளித்தவர்களில் 30.3% பேர், நிறுவனங்களிடமிருந்து அவர்தம் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து மிகவும் பயனுள்ள தகவலைப் பெற்றதாகக் கூறியுள்ளனர். பதிலளித்தவர்களில் 16.6% பேர் நிறுவனத்தின் மின்வாகன மாற்றத்திற்கான முயற்சிகளிலும் அவர்களது செயல்பாடுகளிலும் முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். பதிலளித்தவர்களில் 55.3% பேர், நியாயமான மின்வாகன மாற்றத்தை உறுதி செய்வதுடன் அதன் தொழிலாளர்களை தீவிரமாக வழிநடத்தும் ஒரு நிறுவனத்திடமிருந்து பொருட்கள் வாங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறினர்

நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் நிலைத்தன்மைக்கு (sustainability) முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பங்கேற்பாளர்களிடையே ஒருமித்த கருத்து தெளிவாக இருந்தது. கூடுதல் கட்டணங்களை நுகர்வோர் மீது சுமத்துவதை விட, நிலைத்தன்மையை நோக்கிய முயற்சிகளுடன் தொடர்புடைய செலவுகளை வணிக நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 6 மாநிலங்களில் உள்ள 10 நகரங்களில் மொத்தம் 3800 பேர் கணக்கெடுக்கப்பட்டனர். நகர வாரியாக - டெல்லி (380 பேர்), மும்பை (380) & புனே (380), அசன்சோல் (373) & கொல்கத்தா (371), கோயம்புத்தூர் (380) மற்றும் சென்னை (372), பெங்களூரு (372) மற்றும் ஹூப்ளி-தர்வாட் (374) மற்றும் அகமதாபாத் (370) (குஜராத்).

சௌதாமினி ஜுட்ஷி, மேலாளர், Business Development and Partnerships at Purpose

"நுகர்வோர் உணர்தல் கணக்கெடுப்பு, நுகர்வோர் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், மேம்பட்ட நிறுவனம்-வாடிக்கையாளர் ஈடுபாட்டிற்கும், அவர்களின் தகவல்தொடர்புகளில் இந்த நுண்ணறிவுகளை உருவாக்குவதற்கும், அவர்களின் முடிவுகளிலும் ஒரு மதிப்புமிக்க கருவியாகும்" என்று கூறினார்.

Electric vehicle
Electric vehicleMIT

குமார் நிடந்த், மேலாளர் - Energy Transitions, Climate Group

"மின்வாகன முன்னெடுப்புகளை எடுக்கும் நிறுவனங்கள் தங்கள் நிலைத்தன்மை நோக்கிய நடைமுறைகளை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, இ-மாற்றத்திற்கான துறையில் உள்ள மற்றவர்களையும் ஊக்குவிக்கின்றன. எங்களின் உலகளாவிய முன்முயற்சிகளான EV100 மற்றும் EV100+ ஆகியவை 2030 மற்றும் 2040க்குள் மின்சார வாகனங்களுக்கான (EVகள்) மாற்றத்தை விரைவுபடுத்த உறுதிபூண்டுள்ள முன்னோக்கு நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது. இந்த முன்முயற்சிகள் சார்ந்த செயல்பாடு மற்றும் உரையாடல், இதில் ஈடுபடும் நிறுவனங்களை வெற்றிகரமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் அதே வேளையில், இது OEM-களுக்கான வலுவான தேவை சமிக்ஞையையும் உருவாக்குகிறது.” என்றார்.

Electronic Vehicle
AI தொழில்நுட்ப வசதிகளுடன் iPhone 16 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள்! விலை எவ்வளவு தெரியுமா?

மேற்கோள்கள்

கோவையில் நடைபெற்ற குறுங்குழு விவாதத்தில் பங்கேற்றவர்கள்

“சில விநியோக நிறுவனங்கள் சென்னையில் மின் வாகனங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த வகையான செயல்பாடுகளை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன். மின்சார வாகனங்கள் அல்லது நிலையான தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களுடன் நுகர்வில் ஈடுபடுவதில் நான் மகிழ்ச்சியடைவேன். அத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியாக இருப்பது, சில அர்த்தமுள்ள செயல்பாடுகளில் பங்களிப்பதாக என்னை உணர வைக்கும்.

vehicles
vehiclesjpt desk

கஜேந்திர ராய், இயக்குனர் - ஆராய்ச்சி, CMSR ஆலோசகர்கள்

"10 நகரங்களில் 3,800 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு, கடைசி மைல் விநியோக துறையில் மின்சார வாகனங்களுக்கு (EVகள்) மாறுவது தொடர்பான நுகர்வோர் கருத்துக்களின் வலுவான பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது. இந்த கணக்கெடுப்பின் மாதிரி அளவு (sample size) 95% நம்பிக்கை நிலை மற்றும் 5% பிழை-வரம்பை உறுதி செய்வதால் அதன் ​​தரவு நுகர்வோர் விழிப்புணர்வு, நம்பிக்கை மற்றும் கார்ப்பரேட் சுற்றுச்சூழல் முன்முயற்சிகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் பற்றிய நம்பகமான தகவல்களை வழங்குகிறது. தரமான குறுங்குழு விவாதகள் (Focussed Group Discussion) கொண்ட ஒரு கலப்பு-முறை அணுகுமுறையை பயன்படுத்தும் கணக்கெடுப்பாக இது இருப்பதால், பிராந்திய நுணுக்கங்களைப் பற்றிய விரிவான புரிதலை இது உறுதிசெய்கிறது. இந்த ஆய்வை பொதுமக்களின் உணர்வை அளவிடுவதற்கும் அதற்கேற்றார் போல் தமது நிலைத்தன்மை உத்திகளைச் செம்மைப்படுத்துவதற்கும் நிறுவனங்களுக்கு ஒரு முக்கியமான கருவியாக நிலைப்பெறுகிறது.

சஞ்சீவ் கோபால், Chief of Strategy, Asar

"நிறுவனங்கள் அதிகளவில் இந்த துரிதப்படுத்தப்பட்ட மின்வாகன மாற்றத்தை தங்கள் திட்டங்களில் ஒருங்கிணைப்பதை தங்களது கார்ப்பரேட் பொறுப்புகளாக ஏற்றுக்கொள்வதால், சமூகத்திற்கு இது ஒரு மதிப்புமிக்க பங்களிப்பு மற்றும் மூலோபாய வாய்ப்பாகும். இந்த அறிக்கையின் தகவல்கள், நிறுவனங்கள் தங்கள் மின்வாகன மாற்றத் திட்டங்களை மிகவும் வெளிப்படையான மற்றும் பயனுள்ள முறையில் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கும்” என்று நாங்கள் நம்புகிறோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com