’நான் பணியாற்றும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை’ என தலைமையாசிரியை கிராம சபை கூட்டத்தில் கண்ணீர் மல்க குற்றம் சாட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள மாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலமரத்துப்பட்டி கிராமசபை கூட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கண்ணீர் மல்க பேசிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் பணிபுரியும் அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய வசதிகள் இல்லை என்றும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை எனவும் ஓலைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் சக்தி, கிராமசபை கூட்டத்தில் பேசினார். அரசுப் பள்ளியில் பணியாற்றுவது சாபக்கேடானது என அவர் குறிப்பிட்டார்.