போதிய ஊழியர்கள் இல்லாமல் அரசுப் போக்குவரத்து கழகம் தவிப்பதாக புகார்

போதிய ஊழியர்கள் இல்லாமல் அரசுப் போக்குவரத்து கழகம் தவிப்பதாக புகார்
போதிய ஊழியர்கள் இல்லாமல் அரசுப் போக்குவரத்து கழகம் தவிப்பதாக புகார்
Published on

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆண்டுதோறும் பலர் ஓய்வு பெறும் நிலையில் புதிய ஆட்கள் போதிய அளவில் நியமனம் செய்யப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பேருந்து போக்குவரத்தை நம்பி நாள்தோறும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகங்களிலும் பலர் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, புதிய பேருந்துகளும் வாங்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழங்களில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஒரு புகார் எழுந்துள்ளது. அதாவது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 4000 பேர் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வுபெறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு பதிலாக புதிதாக ஆட்கள் நியமனம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் வேலையில் இருக்கும் நபர்கள் விடுமுறை எடுக்காமல் மன உளைச்சலுடன் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே போதிய ஆட்களை நியமித்து கூடுதல் பணிச்சுமையை தடுக்க வேண்டுமென ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “ போக்குவரத்து கழகங்களில் 20 முதல் 30 சதவீதம் வரையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். எனவே புதிய ஆட்களை தேர்வு செய்ய அல்லது தற்காலிக ஊழியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com